All Saints Day


a post for all saints say with title and image

அனைத்து புனிதர்கள் பெருவிழா

முன்னுரை

அனைத்து புனிதர்கள் பெருவிழா நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி உலகனைத்தும் கொண்டாடப்படுகின்றது.
கிபி 837 வது ஆண்டிலிருந்து மேற்கத்திய நாடுகளில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகையில் பாப்பரசர் நான்காம் கிரகோரி இத்திருவிழாவை திருச்சபை அனைத்திற்குமான திருவிழாவாக ஏற்படுத்தினார்.

சிறப்பு

இந்நாளில் நாம் மறந்துபோன புனிதருக்கு என்றும், சிறப்பான இடம் ஒதுக்கப்படாத விண்ணகத்தில் இருக்கின்ற எல்லா புனிதர்களையும் நினைவு கூறுகின்றோம்.

நோக்கம்

இன்றைய திருவிழா விரிந்த நோக்கம் உடையது.

கடவுளின் மகிமையில் இருக்கும் திருமுழுக்குப் பெற்ற எல்லா கிறிஸ்தவர்களும் இவ்விழாவில் இடம்பெறுவர்.

மேலும் கிறிஸ்தவர் அல்லாதவரும் தன்னுடைய நல்ல சிந்தனைக்கு ஏற்ப நல்லவாழ்வு வாழ்ந்தவர்களும் இவ்விழாவில் இடம்பெறுவர்.

குரு வரலாறு

இவ்விழாவானது திருச்சபையில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாட்களில்  பெயர்அறியாத,  குழுக்களாக சாட்சிகளாய் மரித்த, ஒவ்வொரு வேத சாட்சியையும் நினைவு கூருகின்ற வகையில் துவங்கப்பட்டது.

விழாவின் வளர்ச்சி

இருப்பினும் காலப்போக்கில் இந்த திருவிழாவானது வேத சாட்சிகளை மட்டுமல்லாது புனிதர்களையும், யாரெல்லாம் நற்செய்தியின் விழுமியங்களுக்கு ஏற்ப நம்பிக்கையோடு தூய வாழ்வு வாழ்ந்தார்களோ அவர்களையும் உள்ளாக்கிக்கொண்டது.

திருச்சபையில் இருக்கின்ற எண்ணற்ற புனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு நாளை தந்து கொண்டாட முடியாத காரணத்தினால் இந்த விழா கொண்டாட  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நாலிலே புனிதர்களின் சமூக உறவையும் அவர்களுடைய பேரு பலன்களையும் பெற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கின்றது.

மற்றுமோர் சிறப்பு

இவ்விழாவில் இன்னொரு சிறப்பு அம்சமும் இருக்கிறது. அது என்னவென்றால் நாம் கொண்டாட வேண்டிய புனிதர்களுடைய விழாவை கவனக்குறைவாலும் ஏதோ ஒரு காரணத்தினால் அதனை தவிர்த்து விட்டிருந்தால் இன்று அந்த புனிதருக்கு உண்டான சிறப்பு வணக்கத்தை செலுத்த வாய்ப்பை  ஏற்படுத்திக்கொடுக்கிறது இந்த விழா.

என்ன செய்ய வேண்டும்

இந்த விழா நன்றியின் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

நம் குடும்பத்தில் மரித்து கடவுளுடைய மகிமையில் இருக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவையும் நினைவு கூறுகின்ற நாளாகவும் இருக்கிறது.

இன்று நினைவு கூறுகின்ற இந்த புனிதரும் புனிதையர்களும் நம்முடைய வாழ்விற்கு எடுத்துக்காட்டுகள். அவர்களுடைய வழித்தடங்களில் நாம் பயணிக்க வேண்டும்.

இதை செய்வோமாக!

விண்ணகத்தில் இருக்கின்ற திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களோடு திருச்சபையால் அங்கீகரிக்கப்படாது தூய நிலையில் இருக்கின்ற எல்லா புனிதர்களையும் உள்ளடக்கிய இந்த நாளிலே அவர்களிடம் வணக்கம் செய்வதற்கு ஏற்ற நாள். அவர்களைப் போன்று நம்பிக்கையில் வளர ஜெபங்களை கேட்கின்ற ஓர் நன்னாளாகவும் இருக்கின்றது.

Fr. ஆ. சிங்கராயன்.

RVA Program Director

Philippines

Add new comment

9 + 1 =