Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அருளாளர் பெனடிக்ட் தஸ்வா
யார் இவர்: திருத்தந்தை பிரான்சிஸ் பெனடிக்ட் ஒரு விடாமுயற்சியுள்ள மறைக்கல்வியாளர், ஒரு சிந்தனையுள்ள ஆசிரியர், நற்செய்திக்காக தன் இரத்தத்தையே சிந்தும் ஒரு சாட்சி என அருளாளர் நிலைஉயர்த்துவதற்கான ஆணையில் குறிப்பிட்டிருந்தார். ஷிமங்கசோ சாமுவேல் தஸ்வா தென் ஆப்ரிக்காவிலுள்ள மகி என்னும் கிராமத்தில் 1946, ஜுன் 16 ஆம் நாள் பிறந்தார். 1990 பிப்ரவரி 2 ஆம் தேதி, அதாவது இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த விழா அன்று மறைசாட்சியாக இறந்தார். 2015 செப்டம்பர் 13 ஆம் நாள் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
அப்படி என்ன இவருக்கு சிறப்பு?
பெனடிக் கிறிஸ்தவரானபோது, ஆப்ரிக்க கலாச்சாரத்தில் நிலவிவந்த மந்திரஜாலங்கள், மாயவித்தைகள், சடங்கு கொலை போன்றவற்றை அழிப்பதற்கு நிலைபாட்டினை எடுத்தார்.
பெனடிக் ஒரு நிறைவுள்ள, மிகவும் ஆர்முள்ள அதே வேளையில் தாழ்ச்சியுள்ள, அடக்கமுள்ள மனிதராக திகழ்ந்தார். 1974 ஆண்டிலிருந்து அவர் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியானார். அவர்களுடன் பல மணிநேரம் செலவழித்தார். வாரவிடுமுறையில் அவர்ளுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுத்தார்.
அவருடைய பங்கில் முதன் முதலாக பங்கு அருள்பணிப் பேரவை தொடங்கியபோது அவர் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பங்கில் குழந்தைளுக்கும் இளைஞர்களுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுப்பதிலும், ஞாயிறு வழிபாடுகளை வழிநடத்துவதிலும், நோயளிகளைச் சந்திப்பதிலும், ஏழைகளுக்கு உதவி செய்வதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். தன்னுடைய குடும்பத்தில், குடும்பம் ஒரு குட்டித் திருஅவை என்பதற்கு ஏற்றவாறு நல்ல கணவராக, நல்ல தந்தையாக திகழ்ந்தார்.
தன்னுடைய வகுப்பறையில் மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவைக் கொடுப்பதிலும், அவர்கள் மனத்தில் நல்ல ஓழுக்கஅறிவை விதைப்பதிலும் கருத்தாய் இருந்தார். தன்னுடைய ஆசிரியர்களுக்கு நல்ல கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதற்கு முழுமுயற்சி எடுக்கும்படி வலியுறுத்தினார். இந்த உருவாக்கத்தில் பெற்றோர்களையும் ஈடுபடச் செய்தார்.
ஒரு சிறந்த திறமையுள்ள விளையாட்டுவீராராக இருந்ததால், கடின உழைப்பு. ஒழுக்கம், நோர்மைத்தன்மை குழுவுணர்வு போன்றவற்றின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் இளைஞர்களுக்கு எடுத்து இயம்பினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லாச் சூழ்நிலையிலும் செபத்தில் நிலைத்திருந்தார். திருப்பலி, இறைவார்த்தையால் தன்னை வலுப்படுத்திக்கொண்டார். மபெரும் மறைபொருளாகிய அன்பும் நம்பிக்கையும் அவருடைய வாழ்வின் மையமாக திகழ்ந்தது.
இவர் கத்தோலிக்கர்கள் தங்களுடைய நம்பிக்கையை நினைத்து பெருமைகொள்ளவேண்டும், திருஅவையில் பொறுப்புகளை ஏற்கவேண்டும் என பணித்தார். திருஅவையில் இறை அழைத்தல் பணிக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.
அவர் எப்பொழுதும் அவருடை ஆப்ரிக்க கலாச்சாரத்தை விட்டுவிடவில்லை, மாறாக அவற்றை முழுவதுமாக தழுவி அவற்றை நம்பிக்கையால் தூய்மைப்படுத்தினார், வளப்படுத்தினார். பொதுநிலையினராக, குடும்பத் தலைவராக, விடாமுயற்சியுள்ள மறைக்கல்வியாளராக, நற்சிந்தனையுள்ள ஆசிரியராக இவர் வாழந்தகாட்டிய எடுத்துக்காட்டான வாழ்வு இன்றும் பல தென் அமெரிக்கர்களுக்கு மிகப்பெரிய காவியமாக இருக்கிறது. அதுவும் சிறப்பாக அவர் வாழ்வு கலாச்சாரத்திற்கு எதிராக அல்ல, மாறாக தம் கலாச்சாரத்தின் மேன்மைக்காகவும் மற்றும் ஒவ்வொரு கலாச்சாரம் மற்றும் நாட்டின் மேன்மைக்காகவுமே.
நம் என்ன செய்யலாம்:
ஒரு பொதுநிலையினராக இருந்து, கிறிஸ்தவ விழுமியங்களின்படி வாழுந்து, ஒரு புதிய சாகப்தத்தைப் படைத்திருக்கிறார். நம்;முடைய பங்குகளில் மானுட வளர்ச்சியில் முன்னேற்றத்தில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்வோம். இறையாட்சியை இப்பொழுதே நிலவச்செய்வோம்.
மேலும் கூடுதல் தகவல்களை: www.tsmil.rvasia.org முகவரியில் காணலாம். Follow Radio Veritas Tamil Facebook : http://youtube.com/VeritasTamil Twitter : http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/VeritasTamil SoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website :http://www.RadioVeritasTamil.org Blog: http://tamil.rvasia.org More more info: http://www.october2019.va/en.html The Extraordinary Missionary Month October 2019 Pope Francis announced the Extraordinary Missionary Month October 2019 to celebrate the 100th anniversary of Pope Benedict XV's Apostolic Letter Maximum Illud. Subscribe to Radio Veritas Tamil - http://youtube.com/VeritasTamil **for non commercial use only**
Add new comment