அருளாளர் பெனடிக் தஸ்வா

யார் இவர் - திருத்தந்தை பிரான்சிஸ் பெனடிக்ட் ஒரு விடாமுயற்சியுள்ள மறைக்கல்வியாளர், ஒரு சிந்தனையுள்ள ஆசிரியர், நற்செய்திக்காக தன் இரத்தத்தையே சிந்தும் ஒரு சாட்சி என அருளாளர் நிலைஉயர்த்துவதற்கான ஆணையில் குறிப்பிட்டிருந்தார். ஷிமங்கசோ சாமுவேல் தஸ்வா தென் ஆப்ரிக்காவிலுள்ள மகி என்னும் கிராமத்தில் 1946, ஜுன் 16 ஆம் நாள் பிறந்தார். இவர் மறைசாட்சியாக 1990, பிப்ரவரி 2 ஆம் நாள் இறந்தார். 2015 செப்டம்பர் 13 ஆம் நாள் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

பெனடிக் கிறிஸ்தவரானபோது, ஆப்ரிக்க கலாச்சாரத்தில் நிலவிவந்த மந்திரஜாலங்கள், மாயவித்தைகள், சடங்கு கொலை போன்றவற்றை அழிப்பதற்கு நிலைபாட்டினை எடுத்தார். அதன் விளைவாக அவர் கொடூரமாக கல்லெறியப்பட்டு, அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவருடைய அந்த கொடூரமான மரணம் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, மந்திரவாத்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளிவர போராடுபவர்களுக்கு ஒரு முன்னுதரணமாக மாறினார். 

பெனடிக் ஒரு நிறைவுள்ள, மிகவும் ஆர்முள்ள அதே வேளையில் தாழ்ச்சியுள்ள, அடக்கமுள்ள மனிதராக திகழ்ந்தார். 1974 ஆண்டிலிருந்து அவர் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியானார். அவர்களுடன் பல மணிநேரம் செலவழித்தார். வாரவிடுமுறையில் அவர்ளுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுத்தார்.

அவருடைய எதிரிகள் அவரைத் தீர்த்துக்கட்ட முடிவுசெய்தார்கள். எனவே இளைஞர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு 1990 பிப்ரவரி 2 ஆம் தேதி, அதாவது இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த விழா அன்று இவரைக் கொலைசெய்தார்கள்.

அப்படி என்ன அவருக்கு சிறப்பு?

அவருடைய பங்கில் முதன் முதலாக பங்கு அருள்பணிப் பேரவை தொடங்கியபோது அவர் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பங்கில் குழந்தைளுக்கும் இளைஞர்களுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுப்பதிலும், ஞாயிறு வழிபாடுகளை வழிநடத்துவதிலும், நோயளிகளைச் சந்திப்பதிலும், ஏழைகளுக்கு உதவி செய்வதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அந்த பங்கில் ஒரு ஆரம்பப் பள்ளித் தொடங்குவதற்கு உதவினார். அவருடைய இல்லத்தில் அன்பியக் கூட்டங்களை நடத்தி செபமாலை செபிப்பதிலும் இறைவார்த்தையை பகிர்வதிலும் தங்கள் நேரத்தைச் செலவழித்தனர்.

தன்னுடைய குடும்பத்தில், குடும்பம் ஒரு குட்டித் திருஅவை என்பதற்கு ஏற்றவாறு நல்ல கணவராக, நல்ல தந்தையாக திகழ்ந்தார். தன்னுடைய வகுப்பறையில் மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவைக் கொடுப்பதிலும், அவர்கள் மனத்தில் நல்ல ஓழுக்கஅறிவை விதைப்பதிலும் கருத்தாய் இருந்தார்.

ஒரு சிறந்த திறமையுள்ள விளையாட்டுவீராராக இருந்ததால், கடின உழைப்பு. ஒழுக்கம், நோர்மைத்தன்மை குழுவுணர்வு போன்றவற்றின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் இளைஞர்களுக்கு எடுத்து இயம்பினார். தன்னுடைய ஆசிரியர்களுக்கு நல்ல கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதற்கு முழுமுயற்சி எடுக்கும்படி வலியுறுத்தினார். இந்த உருவாக்கத்தில் பெற்றோர்களையும் ஈடுபடச் செய்தார். 

பொதுவாழ்க்கையில் மாயதந்திரம், நரபலி (சடங்குகொலை), பில்லிசூனியம் போன்றவற்றை எதிர்த்துநின்றார். ஏனென்றால் அது சமூகத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்கிறது. அதே வேளையில் மாயமந்திரம் செய்பவர்களிடம் வராமல் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருபவர்கள்மீது பொறாமை பயஉணர்வு ஏற்பட்டது. மனிதனை முடக்கிப்போடும் இந்த தீயபழக்கங்களிலிருந்து விடுவித்து அவர்களை நல்ல முதிர்ச்சிபெற்ற மனிதர்களாக மாற்றவேண்டும் என உறுதிகொண்டார்.

எனவேதான் ஒவ்வொருவரும் முழுமனசுகந்திரத்துடன் திருஅவையில் மட்டுமல்ல முழு சமூகத்திலும் வாழ்வதற்கு பெனடிக்ட் உதவிசெய்தார். தம் சொந்த இடத்திலுள்ளவர்களுக்கு வழிகாட்டியாக, தன்னுடைய கிராமத்து தலைவர்களுக்கு ஆலோசகராக, தமது திருஅவை மக்களுக்கு மறைகல்வியாளர் மற்றும் செபவழிகாட்டியாக நல்ல கிறிஸ்தவ உணர்வோடு, பிறரன்போடு, மரியாதையோடு, நேர்மையோடு, தாராள உள்ளத்தோடு மற்றும் முழு சுகந்திரத்தோடு பெனடிக்ட் பணிசெய்தார். 

எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லாச் சூழ்நிலையிலும் செபத்தில் நிலைத்திருந்தார். திருப்பலி, இறைவார்த்தையால் தன்னை வலுப்படுத்திக்கொண்டார். மபெரும் மறைபொருளாகிய அன்பும் நம்பிக்கையும் அவருடைய வாழ்வின் மையமாக திகழ்ந்தது.

அவர் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வெட்கபடவில்லை. ஏனென்றால் கடவுளே அவருக்கு திடம் அளித்தார். இவரிடம் நெருங்கி பழகியவர்கள் இவருக்கும் கடவுளுக்குமுள்ள நெருங்கி உறவினை உணர்ந்தார்கள். இவர் தமது திருமுழுக்கின்போது பெற்றுக்கொண்டு நற்பண்புகளை காத்துக்கொண்டார். இவர் கத்தோலிக்கர்கள் தங்களுடைய நம்பிக்கையை நினைத்து பெருமைகொள்ளவேண்டும், திருஅவையில் பொறுப்புகளை ஏற்கவேண்டும் என பணித்தார். திருஅவையில் இறை அழைத்தல் பணிக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும் என வலியுறுத்தினார். 

தன்னுடைய கிராமத்தில் மந்திர வித்தையால் எதாவது நடந்தால் அவர்கள் சங்கோமா (sangoma)என்பவரிடம் ஆலோசனை செய்தனர். அதற்கு சங்கோமாவிற்கு பணம் கொடுத்தார்கள். அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சங்கோமாவின் விரல் யாரை நோக்கித் திரும்புகிறதோ. அவரே குற்றவாளி. வழக்கமாக என்ன நடந்தது என்றால் பொய்யான தகவல்கள் அடிப்படையில் வயதான பெண்கள் அல்லது இயலாதவர்களை குற்றம் சுமத்தி அவர்களைத் தண்டித்தார்கள். அவர்கள் கருத்தைச் சொல்ல அவர்களுக்கு வாய்ப்புக்கொடுக்கவில்லை. எனவே எந்த கபடற்ற மனிதனும் கிராமத்திலிருந்து மாயவித்தைக்காரன் என குற்றம்சாட்டப்பட்டு, கொல்லப்பட இவர் விரும்பவில்லை. 

1989 நவம்பர் முதல் 1990 ஜனவரி வரை அவருடைய கிராமமே வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டது. 1990 ஜனவரி 20 ஆம் தேதி பெரிய புயல்காற்றினால் ஏற்றபட்ட மின்னல்பட்டு சில குடிசைகள் தீப்பற்றி எரிந்தன. மின்னல்பட்டு ஒரு குடிசை எரிகின்றது என்றால் அது மாந்திரக்காரனால்தான் என்னும் நம்பிக்கை கிராமத்தில் வேரூன்றி இருந்தது. மந்திரக்காரரும் அவரை பாதுகாப்பவரும் கொல்லப்படவேண்டும் என்பது கிராமத்தின் விதிமுறை. ஏனென்றால் மந்திரக்காரர்கள் கிராமத்திற்கே ஆபத்தைக் கொடுக்கக்கூடியவர்கள். இது இங்குள்ள பாரம்பரியம். தனக்கு எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டிருக்கிறன என்பதும் பெனடிக்டுக்கும் தெரியும்.

மின்னலினால் குடிசைகள் எரிந்த பிரச்சனையை தீர்க்க அடுத்த ஞாயிறு காலையில் கிராமத்துத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடினார்கள். பெனடிக்ட் வருவதற்கு முன்னர் முடிவுகள் எட்டப்பட்டன. என்னவென்றால் சங்கோமாவைச் சந்தித்து யார் மந்திரம் செய்து மின்னலை வரச்செய்தது என்பதனைக் கண்டறிய முடிவுசெய்தனர். பெனடிக்ட் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காரணம் அப்படி செய்தால் பல குற்றமற்ற மனிதர்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் கிராமத்துத் தலைவர்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவரைக் கொலை செய்தார்கள். 

அவருடைய மறைசாட்சியத்தில் முக்கியமானது என்னவென்றால் அவர் தன்னுடைய கலாச்சாரத்தில் எதுவெல்லாம் நல்லவையோ அவற்றை வளர்தெடுத்தார். எதுவெல்லாம் முழு மானுட வளர்ச்சியைத் தடுத்ததோ அவற்றை மாற்றியமைக்கப் போராடினார். 

திருமணம் என்பது வாழ்க்கை முழுவதும் அன்பைiயும் பகிர்ந்துகொள்ளும் அருள்அடையாளம் என்பதை முழுமையாக நம்பினார். பெண்களுக்கு சமஉரிமை கொடுத்தார். அவர் தன்னுடைய வீட்டு வேலைகளில் தன்னுடைய மனைவி ஈவ்லினுக்கு உதவிகள் செய்தார் என்பதற்கு அவருடைய பிள்ளைகள் சாட்சியாயிருக்கிறார்கள். 

ஒவ்வொரு நாளும் குடும்பச் செபம் செய்தார்கள். மற்றவர்களையும் குடும்பச் செபம் செய்வதற்கு பணித்தார். குடும்பங்களை அவ்வபோது ஒன்றினைத்தார். அவர்களில் பிரச்சனையுள்ளவர்களுக்கு அவரே நடுவரும் ஆலோசகருமாய் இருந்து தீர்த்துவைத்தார். கடைசியாக இவர் அங்கிருந்த நேலி ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். 

அவர் மிகவும் தாழ்ச்சிநிறைந்த மனிதர். துணிவுடன் எதையும் எதிர்கொள்வார், உரையாடல் மூலம் எதையும் சரிசெய்யக்கூடியவர். இவற்றை அவர் இயேசுவுடன் அவர் கொண்டிருந்த நட்பினாலேயே செய்ய முடிந்தது எனப் பலரும் கூறுகிறார்கள். 

அவர் எப்பொழுதும் அவருடை ஆப்ரிக்க கலாச்சாரத்தை விட்டுவிடவில்லை, மாறாக அவற்றை முழுவதுமாக தழுவி அவற்றை நம்பிக்கையால் தூய்மைப்படுத்தினார், வளப்படுத்தினார். பொது நன்மைக்கும் தொண்டாற்றுவதற்கும் அர்பணித்தல் என்னும் உபண்டு அறநெறியை (Ubandu) இவருடைய வாழ்வு வெளிப்படுத்துகிறது.

பொதுநிலையினராக, குடும்பத் தலைவராக, விடாமுயற்சியுள்ள மறைக்கல்வியாளராக, நற்சிந்தனையுள்ள ஆசிரியராக இவர் வாழந்தகாட்டிய எடுத்துக்காட்டான வாழ்வு இன்றும் பல தென் அமெரிக்கர்களுக்கு மிகப்பெரிய காவியமாக இருக்கிறது. அதுவும் சிறப்பாக அவர் வாழ்வு கலாச்சாரத்திற்கு எதிராக அல்ல, மாறாக தம் கலாச்சாரத்தின் மேன்மைக்காகவும் மற்றும் ஒவ்வொரு கலாச்சாரம் மற்றும் நாட்டின் மேன்மைக்காகவுமே.

நம் என்ன செய்யலாம்

ஒரு பொதுநிலையினராக இருந்து, கிறிஸ்தவ விழுமியங்களின்படி வாழுந்து, ஒரு புதிய சாகப்தத்தைப் படைத்திருக்கிறார். நம்;முடைய பங்குகளில் மானுட வளர்ச்சியில் முன்னேற்றத்தில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்வோம். இறையாட்சியை இப்பொழுதே நிலவச்செய்வோம். 

மேலும் கூடுதல் தகவல்களை: www.tamil.rvasia.org என்னும் இணையதள முகவரியில் காணலாம். #veritastamil #rvapastoralcare

 

Add new comment

4 + 11 =