Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்னை அன்னா டெங்கெல்
யார் இவர்: அன்னை அன்னா டெங்கெல் ஆஸ்திரியாவிலுள்ள ஸ்டீக் என்னும் இடத்தில் 1892 மார்ச் 16 இல் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய ஒன்பது வயதில் அவருடைய தாய் இறந்தார். அவருடைய தந்தை மறுதிருமணம் செய்து கொண்டார். தாயின் இழப்பு அவருடைய வாழ்வில் அவர் பிற்காலத்தில் பெண்கள் தாய்மார்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு பணிசெய்வதற்கு முன்னோடியாக இருந்தது.
தனது படிப்பினை ஹால் மற்றும் இன்ஸ்ப்ரூக்கில் முடித்தபின்பு, தனது 19 வயதில் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பொழுது டாக்டர் ஆக்னஸ் மேக்லாரன் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் இந்த சகாப்த்தின் முதல் பெண் மருத்துவர்.
அவருடைய முக்கியமான இலக்கு இந்தியாவிலுள்ள இஸ்லாமிய பெண்களுக்கு மருத்துவ உதவி செய்வது. ஏனென்றால்; இஸ்லாமிய சட்டத்தினால் பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் மருத்துவ உதவி பெறமுடியவில்லை.
தனது 72 வது வயதில் திருத்தந்தை பத்தாம் பத்திநாதரின் ஆசியுடன் இந்தியாவிற்கு வந்தார். 1901 ஆம் ஆண்டு அவர் புனித கேத்தரின் பெண்கள் குழந்தைகள் மருத்துவமனையைத் தொடங்கினார்.
தொடக்கத்தில் அவர் இந்தியாவில் மருத்துவ பணிசெய்வதற்காக பெண் துறவற இல்லங்களை அனுகினார். ஆனால் 12வது நூற்றாண்டிலிருந்த சட்டங்கள் பெண் துறவிகள் மருத்துவப் படிப்பு படித்து பணிசெய்ய அனுமதிக்கவில்லை. எனவே மருத்துவப் படிப்பு படித்து இந்தியாவில் சென்று பணிசெய்ய தாயாராக இருந்த அமெரிக்க, ஐரோப்பிய இளம்பெண்களுக்கு அழைப்புவிடுத்தார்.
என்னுடைய மிகவும் அவசியமான பணி அதுவும் ஒரு பெண்ணால் மட்டுமே சாதிக்ககூடிய ஒரு பணியை ஒரு நற்செய்தி அறிவிப்புப் பணியாளராக செய்ய என் சிறுவதிலிருந்து பெரிய கனவுடன் காத்திருந்தேன். அத்தகைய மிகப்பெரிய கனவுக்கும் இதயத்தின் ஆசைக்கும் பதில் இதுதான் என தான் சேர்வதற்கான இசைவுக் கடிதத்தை தனது 20 வயதில் எழுதினார்.
அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற கடிதப் பரிமாற்றம் ஏமாற்றத்தைத்தான் கொண்டுவந்தது. ஏனென்றால் டாக்டர் மெக்லரனுக்கு ஜெர்மன் தெரியாது, டெங்கெல்க்கு ஆங்கிலம் தெரியாது. டாக்டர் இவரை அயர்லாந்து சென்று படிக்கச் சொன்னார். காரணம் இந்தியாவில் பணிசெய்ய ஆங்கிலம் மிகவும் அவசியமானது. அப்பொழுது இந்தியா ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. கடைசியில் இருவரும் சந்திக்கவே இல்லை. காரணம் டாக்டர் மெக்லாரன் 1913 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.
1919 ஆம் ஆண்டு அன்னா தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு, ராவல்பிண்டி (இப்பொழுது பாகிஸ்தான்) என்ற இடத்திலுள்ள புனித கேத்தரின் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். தினந்தோறும் மருத்துவமனையில் வேலைபார்த்துவிட்டு வீடுகளைச் சந்திப்பது அத்தோடு மொழியையும் கற்றுக்கொள்வது அவளை மிகவும் ஆற்றழிலக்கச் செய்தது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 150 நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார்.
இது அவரை மூன்று ஆண்டுகளில் ஒரு அமைதியற்ற நிலைக்கு கொண்டுவந்து சோர்த்தது. அவருடைய அமைதியற்ற நிலையைக் கண்ட குருவானவர், அவருடைய இறையழைத்தலை உணரும்படியும், ஒரு துறவற சபையில் சேர்ந்து அருள்சகோதரியாக மாறவேண்டும் எனப் பணித்தார். அருள்சகோதரியாக இருந்தால் மருத்துவப்பணி செய்யமுடியாதே என்று டாக்டர் மெக்லாரன் உணர்ந்ததுபோலவே இவரும் உணர்ந்தார்.
1924 ஆம் ஆண்டு தன்னுடைய மருத்துவமனைப் பொறுப்பினை ஒரு இந்திய மருத்துவரிடம் ஒப்படைத்துவிட்டு, இன்ஸபுருக்கிற்கு தியானம் செய்வதற்காக வந்தார். அப்பொழுது மருத்துவப்பணி செய்யும் ஒரு துறவற சபையை உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம் அவரில் ஆழமாக வேரூன்றியது. அவருடைய தியானத்தை வழிநடத்திய குருவாணவரும் இந்த எண்ணத்திற்கு முழு ஆதரவு கொடுத்தார்.
1976 ஆம் ஆண்டு பக்வாதத்தால் பாதிக்கப்பட்டு, உரோமையிலுள்ள மருத்துவமனையில் இருந்தார். அப்பொழுது கொல்கத்தா நகர் புனித தெரசா அவரைச் சந்திக்கச்சென்றார். இந்திய முறையில் புனித தெரசாவின் கைகளைப்பிடித்தவாறு அவருடைய ஆன்மீக ஆசீரை புனித தெரசாவுக்கு அளித்தார். 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 இல் உயிர்துறந்தார்.
அவருக்கு அப்படியென்ன சிறப்பு?
சபை தொடங்குவதற்கான நிதிவுதவி பெறவும், சபைக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய பெண்களையும் தேடி 6 மாதங்கள் அமெரிக்கா பயணம் சென்றார். அங்கே அவருக்கு உதவ ஒரு மருத்துவரும் இரண்டு செவிலியரும் முன்வந்தார்கள். எனவே வாஷிங்டனில் 1925, செப்டம்பர் 30 இல் மருத்துவ மறைபரப்புப்பணி அருள்சகோதரிகள் (Medical Mission SIsters) பக்தசபையைத் தொடங்கினார். அப்பொழுது அருள்சகோதரிகள் மருத்துவராகப் பணிசெய்ய அனுமதியில்லாததால் அவர்கள் வார்த்தைப்பாடு இல்லாத பக்தசபையாக அவற்றை நிறுவினார்கள்.
அருள்சகோதரிகள் மருத்துவராகப் பணிசெய்ய மறுக்கும் திருஅவைச் சட்டத்தை மாற்றியமையக்க பல ஆண்டுகள் முயற்சிசெய்தார். 1936 ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொறாம் பத்திநாதர் அதற்கு அனுமதி அளித்து கான்ஸ்டன்ஸ் அச்சி செயடுலா என்னும் ஆணைப் பிறப்பித்தார். 1941 ஆம் ஆண்டு பக்தசபையாக இருந்தது, மருத்துவ மறைபரப்புப்பணி அருள்சகோதரிகள் துறவற சபையாக மாறியது. 1959 ஆம் ஆண்டு திருத்தந்தையின் அதிகாரம் பெற்ற சபையாக மாறியது.
இந்த சபையானது நான்கு அருள்சகோதரிகளைக் கொண்டு தொடங்கப்பட்டு இன்று 500க்கும் மேற்பட்டவர்கள் ஆப்ரிக்கா, அமரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய இடங்களில் பணிசெய்கிறார்கள். தம்முடைய சபை நிறுவனர்கள் விரும்பியதுபோல இவர்கள் மருத்துவமனைகளில் அந்த மண்ணைச் சார்ந்தவர்களே நிர்வாகம் செய்கிறார்கள். இவர்கள் மருத்துவப் பணியோடு நின்றுவிடாமல் மக்களின் முழு உடல் ஆரோக்கியத்தையும், கிறிஸ்துவில் அவர்களின் ஆன்ம ஆரோக்கியத்தையும் பேணுகிறார்கள்.
அன்னாவின் மிகவும் பெருமைக்குரிய மாணவர் யார் என்றால் அது கொல்கத்தா நகர் புனித தெரசாதான். புனித தெரசா பாட்னாவில் மருத்துவப் பணி அருள்சகோதரிகளிடம்தான் பயிற்சி பெற்றர். டாக்டர் அன்னா இறக்கும் தருவாயில் தான் புனித தெரசாவைச் சந்தித்தார். இந்த இரண்டு சகோதரிகளின் பணிக்கான வழிகள் மாறுபட்டிருந்தாலுமம் அவர்களின் இலக்கு ஏழைகள் புறம்தள்ளப்பட்டவர்களுக்கு சேவை செய்வது (பிறன்புப் பணி). இவர்கள் இருவருமே ஒரு சபையை நிறுவினார்கள். இவர்கள் இருவரிடமும் திருஅவையில் உலகில் மாற்றம் கொணர அயராது உழைக்கும் பேரார்வம் இருந்தது.
எதிர்காலம் உங்களுக்குரியது. நான் என் காலத்தின் சிரமங்களை புரிந்துசெயல்பட்டபோல நீங்கள் உங்கள் காலத்திற்குரிய சிரமங்களை புரிந்து செயல்படுவதில் கருத்தாய் இருங்கள் என்று கூறி 1973 ஆம் ஆண்டு புதிய தலைமுறையினருக்கு அனைத்தையும் கொடுத்தார்.
நம் என்ன செய்யலாம்:
இன்று நம்மிடையே பலர் மருத்துவப் பணிசெய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவற்றை ஒரு தொழிலாக செய்யாமல், இறைவனின் இரக்கத்தையும், அன்பையையும் தம்மைத் தேடிவருபவர்கள் உணரும் வண்ணம் பணிசெய்ய வேண்டும். நோயாளிகளுக்கும் அனாதைகளுக்கும் உடல் ஆன்ம நலனுக்கான நம்மால் முடிந்த உதவியையும் செபத்தையும் கொடுக்கவேண்டும்.
மேலும் கூடுதல் தகவல்களை: www.tamil.rvasia.org என்னும் இணையதள முகவரியில் காணலாம்.
Add new comment