சிறப்பு நற்செய்தி மாதம் - இன்றைய இறை சிந்தனை | October 17

யூதர்களானாலும் கிரேக்கரானாலும் பாவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள் என்பதனை தெளிவாக தனது முதல் அதிகாரத்தில் புனித பவுல் விளக்குகிறார். எனவே மனிதனுடைய தகுதியினால் யாருக்கும் மீட்பு வந்துவிடாது என்பது தெளிவாயிற்று. ஆனால் கடவுள் இந்த நிலையை இயேசு கிறிஸ்துவின் இறப்பு உயிர்ப்பின் வழியாக மாற்றியிருக்கின்றார். பாவத்தின் தளையிலிருந்து மனிதனை மீட்பதற்காக கிறிஸ்துவவை நமக்கு தந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையால் யார் இணைகிறார்களோ அவர்களுக்கு பாவத்திலிருந்து சாவிலிருந்து விடுதலை அளிக்கிறார். நமது நீதியின் அடிப்படையில் நம்பிக்கைகொள்வோர் அனைவருக்கும் மீட்பை அருளுகிறார் என புனித பவுல் குறிப்பிடுகிறார்.

அந்த நிலை புனித பவுலின் காலத்தில் நிலவிய யூத மனநிலைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. மீட்பு என்பது சட்டத்தை நிறைவேற்றுவதில் தான் உள்ளது என்பதாக தங்களுடைய நம்பிக்கையைச் சுருக்கியிருந்தார்கள். அதே வேளையில் பிறஇனத்தவர்கள் திருசட்டத்தைக் கொண்டிராததால் அவர்கள் அழிவிற்குள்ளாவார்கள் என்று கூறினார்கள்.

எனவே புனித பவுல் இதற்கு மாறாக நம்பிக்கையால் ஒருவன் மீட்பைப் பெற்றுக்கொள்வான் எனக் கூறுகிறார். கடவுளின் அழகான முகத்தை அவர்களுக்கு குறித்துக்காட்டுகிறார். அதாவது கடவுள் தன்னுடைய அன்பின் அடிப்படையில் பாவம் நிறைந்த மனிதர்களை சந்திக்கிறார். எனவே மீட்பு என்பது கடவுளின் கொடை. அது நம்பிக்கையால் பெற்றுக்கொள்ளப்படுகிறது. யூதர்களும் நம்பிக்கை கொள்கிறபோது பிறஇனத்தவரோடு கடவுளின் அருளால் மீட்கப்படுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார். 

ஆக இயேசுவின் பரிசேயர்களையும், திருசட்டம் அறிஞர்களையும்  சாடுகிறார். அவர்கள் தங்களுடைய திருச்சட்டத்தை நிறைவேற்றும் செயல்களினால் மீட்பைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதைவிடுத்து தன்மீது கொண்ட நம்பிக்கையினால் மீட்பு கொடையாக கொடுக்கப்படுகிறது என்பதை ஏற்றுச் செயல்பட்டால் தான்; மீட்புஉண்டு என்பதை தெளிவுபடுத்துகிறார். 

புனித அகுஸ்தினார் கூறுகிறார்: உங்களை உருவாக்கியவர்களிடமிருந்து நீங்கள் விலகிச்செல்லாதீர்கள். ஏன் உங்களிடம் கூட செல்லாதீர்கள் என்று கூறுகிறார். எபேசியர் 2:8: நீங்கள் நம்பிக்கையின்வழி மீட்கப்படுகிறீர்கள். இது உங்களின் செயல் அல்ல. மாறாக கடவுளின் மீட்பு.

உரோ 3:21-30, லூக்கா 11:47-54

 

 

Add new comment

3 + 0 =