அருளாளர் தீத்து பிரான்ஸ்மா - October 20, 2019

உலகிற்கும் ஆன்மாவிற்கும் ஒரே நேரத்தில் பணியாற்றிய எடுத்துக்காட்டு. இரண்டிலும் பணி ஒன்றே ஒருவருக்கே சேவை. ஆன்னோ ஜோயெர்ட் பிரான்ஸ்மா என்னும் இயற்பெயர் கொண்ட இவர் 1881 பெப்ரவரி 23 இல் நெதர்லாந்தில் ஃப்ரெஸ்லான்டில் ஒயெகெக்லூஸ்டரில் பிறந்தார். மிகன் பிரான்சிஸ்கன்ஸ்கலால் நடத்தப்படும் பள்ளியில் உயர் கல்வியை பயின்றார். 1898 செப்டம்பர் 22ல் பாக்ஸ் நீரில் இருக்கும் கார்மலேட் மடத்திற்கு பயிலச் சென்றார். அங்கே அவர் தீத்து என்று பெயரை வைத்துக்கொண்டார்.

1901 இல் இவருடைய முதல் புத்தகம் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகம் புனித அவிலா தெரசாவினுடைய எழுத்துக்களின் திரட்டு தொகுப்பை வெளியிட்டார். இது ஸ்பானிய மொழியில் இருந்து டச்சு மொழிக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகம் ஆகும். 1905 இல் குருவானவராக  திருநிலை படுத்தப்பட்ட பின்பு உரோமை நகரத்து கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்திலே படிக்கச் சென்றார். நெதர்லாந்துக்கு திரும்பிய பின்பு இவர் அவிலா தெரசாவின் உடைய படைப்புகளை கற்பிக்கவும், எழுதவும், மொழியாக்கம் செய்ததை டச்சு மொழியில் பரசுவிக்கவும் செய்தார்.

ஜெர்மனியில் நாடளாவிய சமூக கட்சி ஆரம்பிப்பதற்கு சற்று முன்பான காலத்தில் இவர் நிஜ்மீகன் பல்கலைக்கழகத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு கத்தோலிக்க இதழியலாளர்களின் அவைக்கு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் நாட்டின் பொது நல கோட்பாடு பற்றிய பாட திட்டத்தில், இவர் நடைமுறையில் இருக்கின்ற அந்த அசாதாரண சூழ்நிலையை விமர்சிக்க தயங்கவே இல்லை.

தன்னுடைய மடத்தில் இவர் கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணைக்காக சிறைக்கு இழுத்து செல்லப்பட்டார். அங்கே மிகக்கடுமையான துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்தார். அதற்கு மத்தியிலும் கூட அவிலா தெரசா அவருடைய வாழ்க்கை வரலாறை டச்சு மொழிக்கு மொழிமாற்றம் செய்தார். அந்த சிறையிலிருந்து மிகவும் கொடுமையான நடத்தப்படுகின்ற வேறு சிறைக்கு மாற்றப்பட்டார்.

அங்கிருந்து மீண்டும் முதலில் இருக்கின்ற சிறைக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். பின்பு அங்கிருந்து முற்றிலும் வேறுபட்ட மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே சற்று ஓய்வு எடுக்க கூடிய நிலை இருந்தது. மனித தனமும் ஆன்மீகத்திற்கும் சற்று ஓய்வு கிடைத்தது. 1942 ஜூன் மாதத்தில் மீண்டும் இவர் பிற கைதிகளோடு, ஓர் வதை முகாமிற்கு அனுப்பப்பட்டார்.

அங்கே கொடுமைகள் மிக இருந்தன, ‌கடின வேலை, நிர்ப்பந்திக்கப்பட்ட வேலை, உணவு பற்றாக்குறை, மேலும் பன்றிகளை போன்று மனிதர்கள் மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலை. இவரும் அந்த நிலைகளை தாங்கினார். இவைகளால் மிகவும் நோய்வாய்ப்பட்டு முகாமினுடைய  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கே  விஷ ஊசி போடப்பட்டு இறந்தார். 

இவருக்கு அந்த ஊசியை போட்ட செவிலிய பெண்ணுக்கு இவர் ஓர் ஜெபமாலையை கொடுத்தார். அந்தப் பெண்ணே இவருடைய அருளாளர் பட்டத்திற்கு முக்கிய சாட்சி. ஜூலை 27ஆம் தேதி இவருடைய நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஜெபம் என்பது பாலைவனச்சோலை அல்ல அது வாழ்வின் எல்லாம் என்கின்ற எண்ணத்தோடு இந்த குருவானவர் வாழ்ந்தார். குருவானவர், இதழியலாளர், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், ஜெபத்திலே தன்னுடைய வாழ்வை மையமாக வைத்திருந்தார். இதுவே அவருக்கு இப்பேர்பட்ட இன்னல்களையும் தாங்கிக் கொண்டு செயல்பட சக்தியை கொடுத்தது. இதுவே அவருக்கு சாட்சிய வாழ்வு வாழ, உண்மைக்கு, நேர்மைக்கு, விடுதலைக்கு, நாசி அரசாங்கத்தின் கொடுமைகளுக்கு எதிராக சாட்சிய வாழ்வு வாழ சக்தியைக் கொடுத்தது.

அடிக்கடி யோவான் நற்செய்தியை சொல்வாராம், 'அமைதியை நான் உங்களுக்கு தருகிறேன், என் அமைதியையே உங்களுக்கு கொடுக்கிறேன்' என்பாராம். இந்த வார்த்தைகளை நான் திரும்பத் திரும்ப எல்லா இடத்திலும், யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும், ஒரு முறை கேட்டு திரும்பி கொண்டவர்கள் மீண்டும் கேட்க கேட்க நான் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அமைதியை விதைக்க வேண்டும், என்று மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டே இருந்தாராம்.

கார்மலேட் சபையை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு மறைபணி இதயம் இல்லாமல் இருக்குமா? இவருக்கு மாபெரும் மறைபணி இதயம் ஆனால் உடலின் நிலை ஏதுவாக இல்லாத சூழ்நிலையால் இவர் அனுப்பப்படவில்லை. ஆனாலும் மனதில் இவர் ஓர் மறைப்பணியாளர். உலகலாவியத்தை, எளிய அணுகுமுறையை, கலந்துரையாடலை தனதாக்கிக் கொண்டு இயேசுவினுடைய தோழமையை உருவாக்க பணி செய்து கொண்டிருந்தார். வாழ்க்கை இவரை மிகச் சிறப்பான மறை பணிக்கு அழைத்து சென்றது. வதை முகாமில் மக்களுக்கு ஆற்றுப்படுத்தவராய், ஆறுதல் சொல்லுகிறாய் மறைப்பணியாளர் இறந்தார். வேறு எங்கும் மறை  பணியாளராக இருந்து விடலாம் ஆனால் வதைமுகாமில் மறைப்பணியாளர் இருக்க முடியாது. அங்கியும் இவர், மறைப்பணியாளர் செயலாற்றினார்.

எல்லாவகையான ஆய்வுகளுக்கும் உட்படுத்தி புனித இருபத்திமூன்றாம் யோவான் இவரை, 'அன்பிற்கு பலியானவர்' என்று அழைத்தார், 'தொடர்ந்து உண்மைக்கு சான்று பகர்ந்தவர்' என்றும் அழைத்தார். இவர் தொடர்ந்து அவலங்களுக்கு உட்படுத்தப்பட்ட பொழுது, பொறுமையைக் கடைப்பிடித்து, இறைவனை கண்டார். தன் சகோதரர்களை உண்மையில் வழிநடத்தினார். இறை ஒளி இவரை வழி நடத்தியது அதன் வழியாய் இவர் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கின்ற சக்தியை பெற்றார். இவை பாப்பரசர் சொன்னவை. இவர் பணியாற்றிய இடங்கள் மடங்கள் ஆகியன.  ஜெபித்த இடங்கள் நிறைய கஷ்டத்தில் இருப்பவரை வரவேற்கின்ற இடங்கள் ஆயின. பல்கலைக்கழகத்தை இவர் நற்செய்தி போதிக்கும் தளமாக எடுத்து உபயோகித்தார். படங்களை வரையும் இடத்திலே, அந்த வதை முகாமில், எப்படி கடவுள் பார்க்கிறார் என்பதை வரைபடங்கள் மூலமாக எடுத்துக் காட்டியவர். நம்பிக்கைக்கு அதனுடைய பராமரிப்புக்கு இவை எடுத்துக்காட்டு.

எல்லா சூழ்நிலைகளிலும்  அதை தாண்டி வரக்கூடிய சக்தியை அவரிடமிருந்து மக்கள் பெற்றுக் கொள்கின்றனர். வதை  முகாமிலேயே இவ்வாறாக சொல்வாராம், 'எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள், உங்களுடைய சிறப்பானதை செய்யுங்கள், கடவுள் சிறப்பானதையே  நமக்கு செய்வார்' என்பாராம். அந்த இடத்திலும் கூட மக்களுக்கு ஒப்புரவு அருள்சாதனத்தையும், ஆன்மிக நெறிப்படுத்தலையும்  கொடுத்துக்கொண்டிருந்தார். தனக்கு விஷ ஊசி போட்ட செவிலியரிடம் இவ்வாறாக சொன்னாராம், 'நல்ல குருவானவர் என்பவர் அழகான வார்த்தைகளை பிரசங்க மேடையில் இருந்து சொல்பவர் மட்டுமல்ல, தன் மக்களுக்காக வலிகளையும்  பொறுத்துக் கொள்பவர், என்று. இதுவே அவரது துன்பங்கள் மத்தியிலே மகிழ்ச்சிக்கு காரணம். இதுவே அவரை அருளாளர் நிலைக்கு உயர்த்தியது.

நாம் என்ன செய்யலாம்?

Add new comment

6 + 6 =