Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சிறப்பு நற்செய்தி மாதம் - இன்றைய இறை சிந்தனை | October 20 | Rev. Fr. Mariyan #EMM2019 | Ep-20
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காண நாம் அழைக்கப்படுகின்றோம். இஸ்ரயேல் மக்களுக்கும் வேறு இனத்தவருக்கும் அங்கே சண்டை நடந்து கொண்டிருக்கின்றபொழுது, போர், அழிவு என்று பார்ப்பதை விட்டுவிட்டு கடவுள் மீது நம்பிக்கை வைத்து உள்ளதால் காணுகின்ற அந்த மாற்றங்களை, வெற்றிகளை நாம் காண அழைக்கப்படுகின்றோம்.
இன்றைய திருப்பாடல் அதையே சொல்லுகின்றது 121 ஒன்றும் இரண்டும் 'எனக்கு உதவி எங்கிருந்து வரும், ஆண்டவரிடமிருந்து எனக்கு உதவி வரும்' என்று சொல்கிறது.
தொடக்க காலத்திலேயே தவறாக புரிந்து கொண்டதை திருத்த இறைவாக்கினர்களும் உன்னத மக்களும் அனுப்பப்படுகிறார்கள். அதன் உச்சமாக இறை ஆண்டவர் இயேசுவே நமக்கு வருகின்றார். சிலை வழிபாடு, புற வழிபாடு என்று இருந்ததை மாற்றி அன்பு, என் மீட்பு என மாற்றியது இயேசுவினுடைய சாட்சி. இதற்கு இயேசுவே சாட்சி. எல்லாவற்றையும் அன்பு மயமாக்கிய இயேசு, அன்பிற்கு இயேசுவின் மீட்புப்பணிக்கு பாடுகள், மரணம், உயிர்ப்பு ஓர் எடுத்துக்காட்டு. அந்த அன்பை, நீ படித்த, அனுபவித்த, கற்றுக்கொண்ட, அந்த அன்பை பிறருக்கு அறிவிக்க என இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது.
இதுவே நம் பணி. கடவுளை சரியாக புரிந்துகொள்ள, அவரது அன்பை ஏற்க, விதைக்க புறப்படுவோமா!
Add new comment