Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
விவியன் உச்செகி ஒகு - October 24, 2019
கிறிஸ்தவ நம்பிக்கையை வெளிப்படுத்துவதிலும் மாபெரும் தாக்கத்தை இளம்வயது ஒன்பதிலிருந்து பிறறில் ஏற்படுத்தக்கூடிய தைரியத்தையும், 14 வயதிலேயே சீரழிவதை விட கொல்லப்படுவதை மேலென்று வாழ்வின் ஒழுக்க முறை விழுமியங்களை தனதாக்கிய இவரது வாழ்வு. ஓர் பின்பற்றக்கூடிய வாழ்வு. நைஜீரியாவில் இடோ மாவட்டத்திலே பெனின் நகரத்திலே 1995 ஏப்ரல் 1 இல் பிறந்தார். நல்ல கத்தோலிக்க குடும்பம். விமான நிலையம் அருகில் இருக்கின்ற ஒரு வாழ்வியல். இவருடைய தந்தையானவர் கத்தோலிக்க திருச்சபையில் இருக்கின்ற பொதுநிலையினர் மறு அமைப்பு செய்வதற்கு திருச்சபையால் கேட்டுக் கொள்ளப் பட்டவர். பின் இந்நகரத்தின் புனித பவுல் கத்தோலிக்க திருச்சபையில் 1995 ஜூலை 1இல் நம் நாயகி திருமுழுக்கு தரப்பட்டார். 2005 மார்ச் 21 ஆம் நாள் முதல் திருவிருந்துயும் பெற்றார். 2010இல் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் இதற்காக தயாரிப்பு வகுப்புகளுக்கு சென்று கொண்டிருந்தார். பள்ளியிலே சிறந்து விளங்கினார். கல்வியில் உயர்ந்து விளங்கினார். தன்னுடைய சுய ஒழுக்கத்தையும் உறுதியையும் கல்வியோடு சேர்த்து கிறிஸ்தவ வாழ்விலே வெளிப்படுத்தியவர்.
மனிதத்தை அன்பு செய்ய கற்றுக் கொடுத்தவர். வான்படையின் பெண்கள் பள்ளியில் தனது துவக்கக் கல்வியை படித்தார். அவர் இறப்புக்கு முன்பாக சட்ட நிபுணர் ஆகி ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் குறிப்பாக விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் சட்ட பராமரிப்பை வழங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். இவருடைய வழிகாட்டி இவரை பெண் விமானி ஆகுமாரும், அதுவே இந்தப் பணி ஆண்களுக்குண்டானது மட்டுமல்ல என பெண்களாலும் முடியும் என சாதித்துக் காட்டக் கூடியதாக அமையும் எனவும் உற்சாகம் கொடுத்துக்கொண்டிருந்தார். அவளின் பழக்கவழக்கங்கள் வாசிப்பது, பாடுவது, நடனம் ஆடுவது. சிறப்பு கவர்ந்திழுக்கும் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பங்கேற்றதால் இவருடைய ஆன்மீக பயணம் புதிய உத்வேகத்தோடு பயணித்தது. அவள் வளர வளர மகிழ்ச்சியின் குழுவோடு சேர்ந்து நற்செய்தியை விவிலியத்தை வாசிக்கத் தொடங்கினார். நம்பிக்கையை பிற நண்பர்களோடு சேர்ந்து வாழ்ந்து வளர்த்து வந்தார். பள்ளியிலே முக்கிய பொறுப்புகளிலும் மாணவர் மத்தியில் வகித்து வந்தார். இவருடைய திருச்சபையானது பிள்ளைகள் தனியாக ஞாயிறு வழிபாடு அன்று விவிலிய அறிவுரை கொடுக்கப்பட்டு, திருப்பலி நற்கருணை கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். திருப்பலி முடிந்த பின்பு, இன்னும் ஆழமான மறைக்கல்வி கற்பிக்கப்படும். இங்கேதான் ஒன்பது வயதிலேயே நம்முடைய நாயகி, அவரின் ஆர்வத்தையும், தைரியத்தையும், மனித மாண்பை பற்றியும், கன்னித்தன்மையை பற்றியும் எடுத்துரைத்தார். பின்னர் அவர் பாடகர் குழுவிலும் சேர்ந்தார். அப்போது பாடக குழுவின் ஆசிரியர் வராது போகவே இவர் அறிவிக்கப்படாத ஆசிரியரானார். திருப்பலியில் இவர் வாசகங்களை வாசிப்பது அல்லது மன்றாட்டுகள் வாசித்து பங்கேற்று கொண்டிருந்தார்.
2007-இல் மாசில்லா குழந்தைகள் அவையை உருவாக்கி அதன் வழியாக சிறு சேமிப்புகளை சேர்த்து அதன் வழியாக தேவையில் இருந்த ஏழைகளுக்கும் நிறுவனங்களுக்கும் கொடுத்தார். அடுத்த ஆண்டு அதை இன்னும் பெரியதாக ஆகி எல்லா பங்கு மக்களையும் பங்கு பெற செய்து அந்தத் தொகையையும் தேவையில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்க செய்தார். மாசில்லா குழந்தைகள் அவையின் புத்தகத்திலே இவர் உறுப்பினரானார். இயேசுவின் நண்பர்கள் இயக்கத்திலும் உறுப்பினரானார். இறைவார்த்தை மீது ஆர்வம் கொண்டு தூய மத்தேயு எழுதிய நற்செய்தியை வாசிக்கத் தொடங்கினார். அவர் இறக்கின்ற பொழுது 16 அதிகாரங்களை முடிகின்ற அளவில் இருந்தார். இறப்பிலும் கூட ஒரு மாபெரும் எடுத்துக்காட்டை இவர் விட்டு சென்று இருக்கின்றார். 2009 நவம்பர் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையில் மாலையிலே,, ஆயுதங்களோடு இவரது வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்து, இவரையும் இவரது சகோதரியையும் ஓர் நகருக்கு வெளிப்புறத்தில் இழுத்துச் சென்று அங்கே அவரை கற்பழிக்க முயன்றனர். இவர் தொடர்ந்து போராடுவே சுட்டுக்கொல்லப்பட்டார். 2014 மார்ச் 29 அன்று பேராயர் அகுஸ்தீன் இவருடைய பெயரில் ஓர் குழுவை ஏற்படுத்தி அதன் வழியாக இவரது எடுத்துக்காட்டான வாழ்வும், கொல்லப்படும் வரை உண்மைக்கும், கற்பு வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாய் திகழ்ந்தை, மக்களின் சாட்சியங்களை இவருடைய வாழ்வின் விவிலிய விழுமியங்களை, இவரது பெயரால் நடந்தேறிய புதுமைகளை ஒன்று திரட்டவும், புனிதர் நிலைக்கு உண்டான பணிகளை துவங்கவும் அந்தக் குழுவுக்கு பணித்தார். நாம் என்ன செய்யலாம்?
Vivian Uchechi Ogu | விவியன் உச்செகி ஒகு | October 24 | Rev. Fr. Prakash SdC #EMM2019 #veritastamil #rvapastoralcare
More more info: http://www.october2019.va/en.html The Extraordinary Missionary Month October 2019 Pope Francis announced the Extraordinary Missionary Month October 2019 to celebrate the 100th anniversary of Pope Benedict XV's Apostolic Letter Maximum Illud. Subscribe to Radio Veritas Tamil - http://youtube.com/VeritasTamil Follow Radio Veritas Tamil
Facebook : http://facebook.com/VeritasTamil
Twitter : http://twitter.com/VeritasTamil
nstagram: http://instagram.com/VeritasTamil
SoundCloud: http://soundcloud.com/VeritasTamil
Website :http://www.RadioVeritasTamil.org
Blog: http://tamil.rvasia.org
Add new comment