சிறப்பு நற்செய்தி மாதம் - இன்றைய இறை சிந்தனை | October 24p-24

இன்றைய நற்செய்தியில் இயேசு தீயை மூட்டவே வந்தேன் என்கின்றார். இயேசு சொல்லும் இந்தத் தீ என்ன என்றால், விவிலியத்தில் தீ என்பது இறைவார்த்தையை குறிக்கின்றது, எரேமியிவினுடைய புத்தகத்திலே நாம் இதை வாசிக்கலாம். இந்தத் தீ நமக்கு நன்மை பயக்க வல்லது, தீயில் நீ நடந்தாலும் அது உன்னை தீண்டாது என்று ஏசாயா புத்தகத்தில் நாம் வாசிக்கலாம். இந்தத் தீ தூய ஆவியும் குறிக்கின்றது, திருத்தூதர் பணிகளில் நாம் இதை வாசிக்கலாம்.

இந்தத் தீ இன்னொன்றையும் குறிக்கின்றது அது திருமுழுக்கு. திருமுழுக்குப் பெற்ற பின் இயேசுவின் சாட்சிகளாய் நாம் வாழத் தொடங்கும் பொழுது அங்கே எதிர்ப்புகளும் வரும் பிரிவுகளும் வரும். அதை நாம் துணிவோடு எதிர் கொள்ள வேண்டும். இந்த எதிர்ப்புகளும் பிரிவுகளும் வெளியில் இருந்து மட்டுமல்ல பாவத்தின் சுவையை அறிந்த உள்ளுக்குள் இருந்து வரும் என்று இன்றைய முதல் வாசகம் சொல்கின்றது. இந்த பாவம், பாவ நாட்டம் திரும்பி கடவுளிடம் வராத அளவுக்கு சாவிற்கு இழுத்துச் சென்றுவிடும். அதிலிருந்து மீண்டுவரும் அருளை இயேசு கொடுத்திருக்கிறார்.

அந்த அருளை நாம் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். திருமுழுக்கு பெற்றவர்களாய், மீட்கும் அருளைப் பெற்றவர்களாய், உள்ளுக்குள் எழும் பிரிவினைகளையும் நாட்டங்களை கையாள வல்லவர்கள், வெளியில் எழும் சவால்களை சந்திக்க வல்லவர்களாக, நாம் நம்மை கட்டி எழுப்ப வேண்டும் என்று இன்றைய வாசகங்கள் அழைக்கின்றன. இதுவே நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்ற மறைபணி. என்ன? செய்ய புறப்படுவோமா?

More more info: http://www.october2019.va/en.html The Extraordinary Missionary Month October 2019 Pope Francis announced the Extraordinary Missionary Month October 2019 to celebrate the 100th anniversary of Pope Benedict XV's Apostolic Letter Maximum Illud. Subscribe to Radio Veritas Tamil - http://youtube.com/VeritasTamil Follow Radio Veritas Tamil Facebook: http://facebook.com/VeritasTamil Twitter: http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/VeritasTamil SoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website: http://www.RadioVeritasTamil.org

Add new comment

1 + 0 =