சிறப்பு நற்செய்தி மாதம் - இன்றைய இறை சிந்தனை | October 22p-22

இன்றைய முதல் வாசகம், நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவையும் பணியையும் தருகின்றன. முதல் வாசகத்தில் முக்கியமான ஒரு கிறிஸ்தவ அனுபவம் விவரிக்கப்படுகின்றது. மனிதகுலத்தின் மீட்பு செயல்களாளா? கடவுளாளா? என்ற கேள்விக்கு விடை தெள்ளத்தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. கடவுளால் மாத்திரமே இது சாத்தியமாகும் என்று சொல்கின்ற அதே தளத்தில்,

நமக்கு ஓர் நபர் மத்தியில் செயல்படவேண்டும் என்கிறார். பிரிந்து இருக்கின்ற இரு நண்பர்களிடையே காயப்படுத்திய ஒருவர் காயப்பட்டவர்,  அவர் மத்தியில் ஒருவர் உன் நண்பன் என்றும் உனக்காக திறந்த கரங்களோடு காத்திருக்கிறான், காயத்தை மறந்துவிட்டான் என்று சொல்ல ஒரு நபர் வேண்டும். அதற்குப் பின்பாக ஏற்படுகின்ற உறவு, முன்பு இருந்ததைவிட அதிகமாக ஆழமாக இருக்கும்.

இதுவே இயேசுவின் பணி.

தந்தைக்கு நம்மையும், நம்மை தந்தைக்கும், உறவை ஏற்படுத்துகின்ற பணி, பலப்படுத்த என்ற பணி. இது கிறிஸ்து நமக்காக செய்த பணி. நாம் செய்ய வேண்டிய பணி. இதில் தன்னையே தருகின்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற நற்செய்தியி பணி நிறைவடைகிறது. மூன்று வகையான மீட்பு நமக்கு சொல்லப்படுகின்றது: பாவத்திலிருந்து, சட்டத்திலிருந்து, இறப்பிலிருந்து. இதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். பிறரையும் உணர வழிநடத்த வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் இரண்டாம் வருகை உருவகமாக சொல்லப்படுகின்றது. விழிப்பாய் காத்திருப்பது முக்கியத்துவம் தரப்படுகின்றது. நாம் எப்படி காத்திருக்க வேண்டும் என்றால், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அந்த அறிவிப்பு பணியை செய்தவராய், பிறரையும் கடவுளையும் அறிமுகம் செய்தவராய், அந்த அறிமுகத்தை காண கடவுள் எப்பொழுது வருவார் என ஆவலோடு காத்திருப்பவர்களாக  இருக்க வேண்டுமென்று இன்றைய நற்செய்தி சொல்கின்றது.

நமக்கு கொடுக்கப்பட்ட பணியிலே நிறைவாய் இருக்க நாம் என்ன செய்யலாம்?

Add new comment

4 + 1 =