ஆண்டவர் நம்மை எப்பொழுதும்...


God protects

ஆண்டவர் நம்மை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை உணர்ந்திருக்கின்றீர்களா? உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உள்ளும் புறமும், நிச்சயமற்ற ஒரு நிலையை நாம் உணரும் வேளையில், நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கின்றேன் என்னும் ஒரு உறுதியை ஆண்டவர் நமக்கு கொடுக்கின்றார் என திருத்தந்தை அவர்கள் தம்முடைய டுவிட்டர் செய்தியின் வழியாக நமக்கு வழங்கியுள்ளார்.  

இது திருத்தந்தையின் அனுபவம் மட்டுமல்ல, உலகில் வாழும் பல்வேறு மக்களின் வாழ்க்கை அனுபவம். ஆனால் இந்த அனுபவம் பகிரப்படாமலேயே இருக்கின்றது. இந்த அனுபவம் பகிரப்பட்டால் நம் வாழ்வில் பல நலமானவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். 

அதே வேளையில் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்துதவிக்கும் பல்வேறு மக்களுக்கு இது வழிகாட்டியாகவும், உந்து சக்தியாகவும் அமைவதோடு, அவர்கள் தங்கள் வாழ்வின் அனுபவத்தில் கடவுளின் உடனிருப்பு எவ்வாறு செயல்படுகின்றது என்பதனைக் கண்டுகொள்ளலாம். 

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

 

Add new comment

3 + 1 =