அதிர்ட்டமுள்ள பெற்றோர்கள்


Credit Gregorio BorgiaAP.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த வாரம் புனித தமசோ வளாகத்தில் நடைபெற்ற பொதுச் சந்திப்பின்போது (Lucky Parents) ஒரினச் சேர்க்கை, திருநங்கை, இருபாலியல் இயல்புள்ள குழந்தைகளின் பெற்றோர்களின் 40 பேர் கொண்ட குழுவினை கடந்த புதன் (16 செப்டம்பர் 2020) அன்று சந்தித்தார். 

கடவுள் உங்கள் பிள்ளைகளை அவர்களாக அன்புசெய்கின்றார். திருஅவையும் அவர்களை அன்புசெய்கிறது, ஏனெனில் அவர்கள் கடவுளின் பிள்ளைகள். இவர்களுக்காக பணியாற்றும் இத்தாலியின் ஜோனத்தான் டென்ட் அவுட்ரீச் மினிஸ்ட்ரியின் துணைத்தலைவர் லக்கி பேரன்ட்ஸ் என்ற புத்தகத்தைத் திருத்தந்தை அவர்களுக்கு வழங்கினார். 

அந்த புத்தகத்தில் இத்தகைய குழந்தைகள்  பெற்றோர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், எண்ணங்கள், அவற்றின் நேர்மறையான எதிர்மறையான தாக்கங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் இத்தகைய குழந்தைகளின் பல்வேறு கடிதங்கள், வேண்டுதல்கள் திருத்தந்தைக்கு கொடுக்கப்பட்டது. 

திருஅவைக்கு அவர்களுக்கும் ஒரு பாலத்தை உருவாக்கவேண்டும். திருஅவை அவர்களை பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். திருஅவை அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்னும் தங்களுடைய ஏக்கத்தையும் பதிவுசெய்தார்கள். 

இந்த நிகழ்வு இவர்கள் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கக்கூடியதாக அமைந்தது.

நன்றி: கிரக்ஸ் நவ்

Add new comment

5 + 4 =