53 ஆஸ்திரேலியா பூர்வகுடிகள் எலும்புக்கூடுகளை திருப்பிக் கொடுக்கும் ஜெர்மனி


Aboriginal remains returned by Germany to Australia - BBC News

53 ஆஸ்திரேலியா பூர்வகுடிகள் எலும்புக்கூடுகளை திருப்பிக் கொடுக்கும் ஜெர்மனி. ஆஸ்திரேலியா பூர்வகுடிகள் பலரின் எலும்புக்கூடுகளை ஜெர்மனி ஆஸ்திரேலியா திருப்பி கொடுத்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 53 பேரின் எலும்புக்கூடுகள் திருப்பிக் கொடுக்கப் பட்டுள்ளன.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 20 ஆம்  நூற்றாண்டின் துவக்கத்திலும், பூர்வ குடியினரான ஆஸ்திரேலியர்களின் மண்டையோடுகளும் எலும்புகளும், உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் அகற்றப்பட்டு பல்வேறு நாடுகளில் அருங்காட்சியகத்தில்   வைக்கப்பட்டன.

தற்பொழுது தன்னிடம்  இருக்கும் ஆஸ்திரேலியர்களின் எலும்பு கூடுகளை திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளது. ஜெர்மனியின் இந்த முடிவை வரவேற்றுள்ள ஆஸ்திரேலியா தகவல் தொடர்பு மற்றும் கலைக்கான அமைச்சர், பழைய காயங்களை அஆற்றப்படுவதற்கும்  சமரசத்திற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்று தெரிவித்துள்ளார்.

50 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்த பூர்வ குடியினர், குடியேறிகளால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் துரத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

150 ஆண்டுகளாக அவர்களது எலும்புகள் அகற்றப்பட்டு பல்வேறு அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள் என வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் சில ஆராய்ச்சியாளர்களால் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஜெர்மனியில் இருந்த எலும்புகள்தான் தற்பொழுது ஆஸ்திரேலியாவிடம் திருப்பி அளிக்கப் பட்டுள்ளன. 

Add new comment

12 + 4 =