கிறிஸ்தவர்கள்: பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எதிர்நோக்கு


Photo by Vincenzo Pinto/AFP

கிறிஸ்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நம்பிக்கையைக் கொடுக்கவேண்டும் என்று நமது திருத்தந்தை செய்தி வெளியிட்டுள்ளார்.

இயேசுவை உண்மையாக பின்பற்றுபவர்கள் சமூகத்தில் ஒதுக்கிதள்ளப்பட்டவர்கள், கடைநிலையுள்ளவர்கள் சார்பாக நிற்கும் செயல்களை நாடவேண்டும். ஏழைகளின் நிலை நாம் அவர்களிடமிருந்து தள்ளி நிற்பதை விடுத்து, அவர்களில் துன்புறும் இயேசுவைக் காண வழிசெய்யவேண்டும். 

ஏழைகளின் எதிர்நோக்கு எக்காலமும் அளிந்துபோவதில்லை என்ற வார்த்தையை திருப்பாடல் 9 –யை மையமாகக் கொண்டு திருத்தந்தை சொன்னார். இந்த வார்த்தைகள் மாபெரும் உண்மையை வலியுறுத்துகின்றது. எவ்வாறெனில் நம்முடைய நம்பிக்கை ஏழைகளின் இதயத்தை ஊடுருவுகின்றது, அநீதியால், துன்பத்;தால், வாழ்வின் நிலையற்ற தன்மையால் நம்பிக்கையிழந்தவர்களுக்கு எதிர்நோக்கை கொண்டுவருகின்றது என்கிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜான் வானியர் போன்ற மனிதர்களையும் இவ்வேளையில் நினைவுகூர்ந்தார். இவர்கள் இளைஞர்களையும், ஆண்களையும், பெண்களையும் சேர்த்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் அன்பையும், புன்னகை இழந்தவர்களுக்கு புன்னகையையும், மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிமைப்படுத்தபட்ட, ஒதுப்பட்ட வாழ்விலிருந்து மீட்பின் பெட்டகமாக விளங்கினார்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்;டவர்கள் சார்பாக இருக்கவேண்டும். அவர்களுக்கு புதிய நம்பிக்கையையும் எதிர்நோக்கினையும் கொடுக்கவேண்டும் என்பது திருத்தந்தையின் வேண்டுகோள். 
  

 

Add new comment

11 + 8 =