இளையோர் குறித்து திருத்தந்தை கருத்து:


Pope Francis - Diocese of Westminster Youth Ministry

பன்மைத்தன்மைகொண்ட இளையோர் உலகை, வழிநடத்த படைப்பாற்றல்திறன் தேவைப்படுகின்றது என்றும், இளையோரின் நியாயமான ஏக்கங்களுக்கு உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

‘இளையோருடன் நெருக்கமாக இருத்தல்’, ‘வெளியே சென்று இளையோரைச் சந்தித்தல்’, ‘புனிதர்களாக இருப்பார்களாக’ ஆகிய மூன்று தலைப்புக்களில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, தங்களுக்கு நெருக்கமாக   இருக்க வேண்டுமென, இளையோர் விரும்புகின்றனர் என்று கூறினார்.

இளையோர் தங்களின் வாழ்வுப் பாதையில், நாம் உடன்நடக்க வேண்டுமென்றும், தாங்கள் இருப்பதுபோலவே அன்புகூரப்பட விரும்புகின்றனர் என்றும் உரைத்த திருத்தந்தை, தங்களிடம் வருகின்ற இளையோரை மட்டுமல்லாமல், இளையோரை வெளியே தேடிச்சென்று, சந்திக்க வேண்டும் என்றார்.

இளையோரை இறைவன் பக்கம் கொண்டு வருவது, அனைத்துத் துறவற வாழ்வின் பலமாக உள்ளது என்றும், அதற்கு, மிகவும் சரியான நேரம் மற்றும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியாவிடினும், துணிச்சலுடன் வலைகளை வீச வேண்டுமென்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை மற்றும் புதியனவைகளின் இறைவாக்கினர்களாக இருங்கள் என்றும், அச்சபையினரிடம் கூறினார்.

ஒவ்வொருவரும் தங்களின் சொந்த இறையழைப்பின் மகிழ்வை வாழ்வதே, இளையோர் மற்றும் இறையழைத்தல் பணியில், மிகச் சிறந்த மேய்ப்புப்பணியாக அமையும் என்பதை நினைவில் இருத்துமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கனவு காண்கின்ற மற்றும் இறைவாக்குரைக்கும் பண்பைக் கொண்ட திறமையை, எவரும் திருடிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள் என்றும், மூவொரு கடவுள் துறவு சபை பிரதிநிதிகளிடம் கூறினார். 

Add new comment

5 + 1 =