27 ஆண்டுகள் கோமாவில் இருந்த தாயை மீட்ட மகன்


mother of Omer. Lanka Sri News.

ஐக்கிய அரபு அமீரகத்தில், 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து ஒன்றில் மோசமாக காயமடைந்து, 27 வருடங்கள் கோமாவில் இருந்து மீண்டுள்ளார் பெண் ஒருவர். முனிரா அப்துல்லா என்ற அந்த பெண், தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வந்துகொண்டிருந்த சமயத்தில், அவர் பயணம் செய்த கார் பேருந்து ஒன்றின் மீது மோதியதால் அவர் மூளையில் தீவிரமான காயங்கள் ஏற்பட்டன.

முனிராவுக்கு அப்போது 32 வயது, அவரின் மகன் உமருக்கு நான்கு வயது. விபத்து நடந்த சமயத்தில், முனிராவின் கணவரின் தம்பி அந்த காரை ஓட்டியுள்ளார். முனிராவும் அவரது மகனும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். தனது மகனை முனிரா அரவணைத்து கொண்டதால் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். முனிராவுக்கு 27 வருடங்கள் கழித்து கடந்த வருடம் மருத்துவமனையில் நினைவு வந்துள்ளது.

1991 ஆம் ஆண்டு முனிரா ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு கை மற்றும் கால் தசைகளுக்கு பல்வேறு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருடைய உடல் நலனை மேம்படுத்த மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. பின்னர் ஒரு வாரம் கழித்து ஒரு நாள் தன்னுடைய அம்மாவை சரிவர பார்த்துக் கொள்வது இல்லை என மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.

அடுத்த மூன்று நாட்கள் கழித்து ஒமர் என யாரோ ஒருவர் கூப்பிடுவது போல குரல் ஒலிக்கிறது. அந்த குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிய அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய அம்மாவிற்கு வேறு எதுவும் பேசத் தெரியவில்லை மகனுடைய பெயர் மட்டும் கூறி அழைத்துள்ளார்.

செய்தித்தாள் நேர்காணல் ஒன்றில் அந்த விபத்து குறித்தும், தனது தாயின் சிகிச்சை குறித்தும் இந்த செய்தியினை பகிர்ந்துள்ளார் உமர். "ஒருநாள் நிச்சயமாக அவர் கண் விழிப்பார் என்று நான் நம்பினேன். எனது நம்பிக்கையை நான் இழக்கவில்லை" என்று உமர் தெரிவித்துள்ளார். "உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு இம்மாதிரியான நிலை ஏற்பட்டால் உங்களின் நம்பிக்கையை கைவிடாதீர்கள் என்பதை தெரிவிக்கவே இப்போது நான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளேன்" என்று மேலும் தெரிவிக்கிறார் ஒமர்.

"எனது தாயும் நானும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தோம் பேருந்து எங்கள் மீது மோத வரும் அந்த நிமிடத்தில் என் தாய் என்னை அரவணைத்து கொண்டார்" என்று அந்த நிமிடங்களை நினைவு கூறுகிறார் உமர். 

Add new comment

12 + 0 =