விமான இயந்திரத்தில் நாணயம் வீசிய பெண் பயணி, கரணம் ...


An image of coin from flight engine. from The Straits Times.

சீனாவில் 66 வயது பெண் பயணி ஒருவர் 6 நாணயங்களை விமானத்தின் என்ஜினில் வீசிவிட்டு அதற்கு அவர் கூறிய காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தியான்ஜின்  நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஹாட் ஹாட் பீட்டா  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 100 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. 

அப்போது விமானத்தில் பயணம் செய்யவிருந்த 66 வயது பெண் விமானத்தின் என்ஜினில் ஏதோ ஒன்றை வீசியுள்ளார். அதன்பின் அவரை பிடித்து நடத்தப்பட்ட விசாரணையில் விமானம் நல்லபடியாக பயணிக்க  வேண்டும், எந்த ஒரு விபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர் ஆறு உள்ளூர் நாணயங்களை வீசி இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த பெண் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டதாகவும், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இப்படி நடந்து கொண்ட அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கூறப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் யான் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது  மற்ற தகவல்கள் எதுவும் இல்லை.

மேலும் இதுபோன்ற நடப்பது இது முதல் முறை அல்ல. இதேபோன்று பயணிகள் சிலர் விமானத்தின் என்ஜினில் நாணயங்களை தூக்கி வீசியது உண்டு  என்றும்,  இப்படி வீசுவதால் விமானத்திற்கு தான் பிரச்சனை வரும் என்றும், விமானமானது நடுவானில் பறக்கும் பொழுது எஞ்சினில் சுற்றும் போது அந்த நாணயங்கள் என்ஜினில் சிக்குவதற்கு  வாய்ப்பு இருக்கிறது, உள்ளே இருக்கும் பயணிகளுக்கு தான் இது ஆபத்து என்று பலமுறை விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவிக்கிறது.

Add new comment

1 + 0 =