Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வானிலை மாற்றத்தால் வரும் ஆபத்து - WHO
புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுவரும் வானிலை மாற்றம், மனித உடல் நிலையை கடுமையாக பாதிக்கலாம் என்று எச்சரிக்கிறது, ஐ.நா.வின் WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம்.
வானிலை மாற்றத்தால் காற்றின் தரம் (அதிலுள்ள ஆக்சிஜன் அளவு) கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும், அதன் விளைவாக, சுவாச நோய்கள் அதிகரிக்கலாம் என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது. கோடைக் காலங்களில் வீசும் அனல் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும், அது வீசும் காலம் நீடிக்கலாம் என்றும், இந்த மாற்றம் பொதுவாக குழந்தைகளை பாதிப்பது மட்டுமின்றி, இதய துடிப்பை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
வானிலை மாற்றத்தால், மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்கள், குறிப்பாக, தண்ணீரால் பரவும் காலரா, வாந்தி-பேதி ஆகியவற்றைக் குறித்த முன்னெச்சரிக்கையையும் வழங்கியுள்ளது, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம்.
(வத்திக்கான் செய்தி - மே 25, 2019)
Add new comment