மூடப்பட்டது ஈபிள் கோபுரம் சுற்றுலாப் பயணிகள் சோகம்


Image of clossed Effil Tower. PC: EN.RFI.FR.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடையாள சின்னமாக திகழும் ஈபிள் கோபுரம் மூடப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கோபுரத்தின் மீது நபர் ஒருவர் ஏறியதை அடுத்து ஈபிள் கோபுரம் மூடப்பட்டு உள்ளது என கோபுரத்தை நிர்வகித்துவரும்  நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கோபுரத்தின் மேல் நபர் ஒருவர் ஏறுவதை  கண்டு அவரைத் தடுக்க வேண்டியது எங்களின் கடமை அதன் காரணமாகவே ஈபிள் கோபுரம் மூடப்பட்டது, இது வழக்கமான நடைமுறைதான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈபிள் கோபுரத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஈபிள் கோபுரம் தற்போது மூடப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும்வரை பார்வையாளர்கள் அவர்களுடைய வருகையை  ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோபுரத்தின் மேல் இருக்கும் நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், எனினும் தற்போது வரை கோபுரத்தின் மீது ஏறியதற்கான காரணம் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியை  போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் மக்கள் இப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

(லங்கா ஸ்ரீ - மே 21, 2019) 

Add new comment

7 + 1 =