மீளா துயரத்தில் பெற்றோர்: 537 பச்சிளம் குழந்தைகளுக்கு எச்ஐவி: கவலையில் பாகிஸ்தான்.


Pakistani children worst affected in HIV outbreak - BBC News BBC

மீளா துயரத்தில் பெற்றோர்: 537 பச்சிளம் குழந்தைகளுக்கு எச்ஐவி: கவலையில் பாகிஸ்தான். ஆசிய நாடான பாகிஸ்தானில் மேலும் 537 குழந்தைகள் உட்பட 681 பேர் எச்ஐவி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத்தின் ராட்டோ டியோ நகரை சேர்ந்த மக்களே எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் அந்த நகரில் நூற்றுக்கணக்கான பேருக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர் ஒரே கருவியை  கொண்டு பலருக்கு எச் ஐ வி சோதனை செய்ததால்தான் நோய் பரவுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் எச் ஐ வி சோதனை செய்து வருகின்றனர். தற்பொழுது வரை 681 பேருக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 537 பேர் 2 முதல் 12 வயதுடைய குழந்தைகள் ஆவர். இது அரசாங்கத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சிறப்பு சுகாதார ஆலோசகர் தெரிவித்திருக்கின்றார்.

தற்பொழுது  50,000 எச்ஐவி சோதனைக் கருவிகளை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழுவும் இப்பகுதியில் எச் ஐ வி வைரஸ் ஏற்படுவதற்கான காரணத்தை அறிய பாகிஸ்தானி அதிகாரிகளுக்கு உதவி செய்ய விரைவில் வர திட்டமிட்டுள்ளது என சிறப்பு சுகாதார ஆலோசகர் ஜாபர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

(Lanka Sri - மே 27, 2019)

Add new comment

18 + 0 =