மறைக்கல்வி உரையில் பிரான்ஸ் பற்றி திருத்தந்தை


மறைக்கல்வியுரை - 17/04/19 (ANSA)

நோத்ரு தாம் பேராலயத்தில் தீ விபத்து நிகழ்ந்ததையடுத்து, பாரிஸ் மறைமாவட்டக் குடும்பம், பாரிஸ் நகர மக்கள், இன்னும் பிரான்ஸ் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் என் நெருங்கிய உறவையும், அன்பையும் இத்தருணத்தில் வெளிப்படுத்துகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.

ஏப்ரல் 17, இப்புதன் காலை, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோருக்கு வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், பிரான்ஸ் நாட்டிலிருந்து அங்கு வந்திருந்த திருப்பயணிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்திய வேளையில், நோத்ரு தாம் பேராலயத்தைக் காப்பதற்காக, தங்கள் உயிரையும் பணயம் வைத்து உழைத்த அனைவருக்கும் தன் நன்றியை தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்த நெருக்கடி நேரத்தில் பணியாற்றிய அனைவரையும், அன்னை மரியா ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், இந்தப் பேராலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் அனைவருக்கும் இறையருள் கிடைக்கும்படியாகவும், திருத்தந்தை, தன் செபம் கலந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் அவர்களுக்கும் இடையே தொலைப்பேசி உரையாடல் நிகழ்ந்ததென்று, வத்திக்கான் செய்தித்துறை தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், தன் டுவிட்டர் செய்தி வழியே அறிவித்துள்ளார். 

(வத்திக்கான் செய்தி)

Add new comment

1 + 0 =