போதை பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே துப்பாக்கி சண்டை: 10 பேர் பலி


Two criminal gangs clash in Michoacán leaving 10 dead. PC: Mexico News Daily

மெக்சிகோவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையே தொழில் ரீதியில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. இந்த மோதலில் பலர் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள லம்போர்டியா நகரில் உரைப்பன் என்ற இடத்தில் 2 போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே கடும் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். அருகில்  இருந்தவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் இந்த துப்பாக்கி சண்டையில் இருதரப்பையும் சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

(Thinaboomi - மே 26, 2019)

Add new comment

1 + 7 =