பெல்காம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்


பெல்காம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமனம் பெற்றுள்ள ஆயர் டெரெக் பெர்னாண்டஸ்

இந்தியாவின், கார்வார் (Karwar) மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவரும், டெரெக் பெர்னாண்டஸ் அவர்களை, பெல்காம் (Belgaum) மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 1, இப்புதனன்று நியமித்துள்ளார்.

1954 ஆம் ஆண்டு பிறந்த டெரெக் அவர்கள், 1979 ஆம் ஆண்டு, பெல்காம் மறைமாவட்ட அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு, பின்னர், 2007 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் தேதி, அதே மறைமாவட்டத்தின் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

இவருக்கு முன்னர், பெல்காம் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த பீட்டர் மச்சாடோ அவர்கள், 2018 ஆம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, பெங்களூரு பேராயராகப் பணிமாற்றம் பெற்றார். அவருக்கு முன்னதாக, அதே பெல்காம் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த பெர்னார்டு மொராஸ் அவர்களும், பெங்களூரு பேராயராகப் பணிமாற்றம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராயர், பீட்டர் மச்சாடோ அவர்கள், பெங்களூருவுக்கு பணிமாற்றம் பெற்றதிலிருந்து, பெல்காம் மறைமாவட்டம், கடந்த 14 மாதங்களாக ஆயரின்றி இருந்தது. 

(வத்திக்கான் செய்தி - 02 மே 2019) 

Add new comment

3 + 0 =