பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒருவர் பலி 6 பேர் படுகாயம்


Peru earthquake. PC: AccuWeather

நேற்றையதினம் பெரு நாட்டில் மிகவும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதில் ரிக்டர் அளவில் 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிகள், தேவாலயங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.11 மணியளவில் அல்டோ அமேசானஸ் மாகாணத்தின் லகனாஸ் மாவட்டத்தின் தென் கிழக்கே சுமார் 83 கிலோமீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் சுமார் 105 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தை 8  ரிக்ட்டர்களாக  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பீடு செய்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் போது பல இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதன்போது சாலைகள் இரண்டாகப் பிளந்தது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும்,  6 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள பிரேசில் கொலம்பியா மற்றும் ஈக்குவேடார் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக  செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மேலும் சேத விபரங்களை அதிபர் மார்ட்டின் விஸ்காரா தனது அமைச்சரவையுடன்  சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(Lanka Sri - மே 27, 2019)

Add new comment

10 + 1 =