பெண் பத்திரிக்கையாளரின் கோரமான கொலை ஐரோப்பாவை உலுக்கிய சம்பவம்...


An image of a car burning after the murder of a female press person

அயர்லாந்தின் கிரேக்கான் பகுதியில் 29 வயது பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு 11 மணியளவில் பெண் பத்திரிகையாளர் மீது பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பெட்ரோல் குண்டுகளை அவர் மீது தூக்கி எறிந்து இதில் கார் சேதம் அடைந்து வெடித்து சிதறியுள்ளது.

பத்திரிக்கையாளரான லியோனா இந்த பத்திரிக்கையாளர்களின் இறப்பு குறித்து உறுதிப்படுத்தியுள்ளார். நான் நின்று கொண்டிருந்த பொழுது தான் இந்த பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்கிறார்.

நான் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்க முற்படுகையில் போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டார். அவளது மரணம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இந்த தீவிரவாத சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர் கோரமாக கொலை செய்யப்படுவது ஐரோப்பிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add new comment

9 + 9 =