பாரிஸ் தீவிபத்து, அதே நேரத்தில் பாலஸ்தீன மசூதியிலும் தீ விபத்து


Jerusalem: Firefighters Put Out Blaze at Al-Aqsa Mosque. image from Democracy Now!

பாரிஸில் வரலாற்று சிறப்புமிக்க நாட்ரி டாம் பேராலயம் தீப்பிடித்து எரிந்த அதேநேரத்தில், பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மசூதியில் உள்ள மர்வானி  பிரார்த்தனை அறையின் கூரை பகுதி தீப்பிடித்து எரிந்தது எடுத்து இஸ்லாமிய தீ படையினரால் இந்த தீ விபத்து அணைக்கப்பட்டது. பிரார்த்தனை அறையின் கூரை பகுதியில் இருந்து புகை வருவது போன்ற காணொளிகள்  வெளியாகி உள்ளன. இந்த மசூதியானது  இஸ்லாமின் மூன்றாவது புனித தலமாக கருதப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் அல் அக்ஸா மசூதியின் விவகாரத் துறையின் இயக்குனர் செய்ட் அல் ஹதீத் கூறியதாவது அந்தப் பகுதியில் விளையாடிய குழந்தைகளால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது என கூறியிருக்கிறார்.

Add new comment

6 + 11 =