பறந்து வந்து ஹெலிகாப்டர்கள் மீது பயங்கரமாக மோதிய விமானம்


Nepal flight flight crash

நேபாளத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் உள்ள சொலுகும்பு மாவட்டத்தில் டென்சிங் ஹிலாரி லுக்லா விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு இமய மலையை சுற்றி காண்பிக்கப்படும். இந்நிலையில் இன்று சுற்றுலா பயணிகள் யாரும் வராத நிலையில் சிறிய ரக விமானத்தை இயக்கிய விமானி  தயாரானார். அதில் விமானி துணை விமானி, உதவி ஆய்வாளர் ஆகியோர் இருந்தனர்.

அப்போது திடீரென நிலை தடுமாறிய விமானம் அங்கு நின்றிருந்த இரண்டு எலிகாப்டர் மீது பலமாக மோதியது. இதில் விமானம் கடுமையாக சேதம் அடைந்தது. இதில் விமானத்தில் இருந்த துணை விமானி, உதவி ஆய்வாளர் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் இருந்த பாதுகாப்பு அதிகாரி, ஒரு விமான பணிப்பெண் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் அதிகாரிகளை  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Add new comment

2 + 4 =