நூதன முறையில் அகதிகள் கடத்தல் 3 பேர் கைது


People migrating in car engine. PC: BBC.

காரின் எஞ்சின் மற்றும் டேஷ்போர்டுகளுக்குள் வைத்து அகதிகளை கடத்திய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நூதன முறை கடத்தல் நடந்தது மொராக்கோ நாட்டில். ஒரு 15 வயதுப்பெண் 20, 21 வயதுடைய ஆண்கள் உட்பட மொத்தம் நான்கு பேரை கடத்த முயன்றிருக்கின்றனர்.  இவர்கள் ஒருவர் காரின் இன்ஜின் அறையிலும், இன்னொருவர் டேஷ்போர்டுகுள்ளும் மற்றொருவர் காரின் பின் சீட்டுக்கு பின்னாலும் மறைந்தனர்.  நான்காவது நபர் குப்பை லாரி ஒன்றின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டு இருந்தார்.

எப்படியாவது ஸ்பெயினுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆசையில் உயிரை பணயம் வைக்கத் தயங்குவதில்லை இந்த மக்கள். வாகன சோதனையில் சிக்கிய 3 கார்களை போலீசார் சோதனையிட்ட போது இந்த அகதிகள் சிக்கினர். சிக்கியவர்களில் அந்த 15 வயது பெண் மற்றும் இரு இளைஞர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியதாயிற்று.

நெருக்கமான இடத்தில், காற்றும் இல்லாமல், கைகளை மடக்கி கொண்டு வெகு நேரம் இருந்ததால் அவர்கள் மூச்சுத் திணறல் மூட்டு வலியுடன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டனர்.
மொராக்கோவைச் சேர்ந்த  மூன்று ஆண்கள் இந்த அகதிகளை சட்டவிரோதமாக கடத்தியதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Lanka Sri - மே 27, 2019)

Add new comment

11 + 9 =