Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திருச்சபைக்கு மேலும் 10 இரையாடியர்: யார்யார் என்று தெரியவேண்டுமா?
புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பெச்சு அவர்கள், ஜூன் 11, இச்செவ்வாய் மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, பத்து இறை அடியாரின் புண்ணியம் மிகுந்த பண்புகளை சமர்ப்பித்த வேளையில், அவற்றை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அவர்களது புனிதர் பட்ட வழிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கினார்.
ஸ்பெயின் நாட்டின் Pola de Somiedo என்ற ஊரில், 1936 ஆம் ஆண்டு, அக்டோபர் 28 ஆம் தேதி, கொல்லப்பட்ட இறையடியார் Pilar Gullón Yturriaga, மற்றும் இரு பொதுநிலையினரின் மரணம், மறைசாட்சிய மரணம் என்பதை திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.
1897 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் இறையடி சேர்ந்த மறைமாவட்ட அருள்பணியாளர் Augustine Tolton மற்றும் 1993 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்த இத்தாலியின் மறைமாவட்ட அருள்பணியாளர் Enzo Boschetti ஆகிய இறையடியாரின் புண்ணியம் மிகுந்த வாழ்வை திருத்தந்தை அங்கீகரித்து, ஒப்புதல் வழங்கினார்.
மேலும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருள் சகோதரர் Felice Tantardini, அருள் பணியாளர் Giovanni Nadiani, அருள் சகோதரிகள், Maria Paola Muzzeddu, மற்றும் Maria Santina Collani ஆகிய நான்கு இறையடியாரின் புண்ணியம் மிகுந்த வாழ்வை திருத்தந்தை அங்கீகரித்து, ஒப்புதல் வழங்கினார்.
திருத்தந்தையின் ஒப்புதலைப் பெற்ற பத்தாவது இறையடியார் Maria Beatrice Rosario Arroyo அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டில், புனித செபமாலையின் தொமினிக்கன் அருள் சகோதரிகள் என்ற துறவு சபையை நிறுவி, 1957 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தவர். (Vatican News)
Add new comment