திருஅவையின் ஒன்றிப்புக்காக உழைத்த புனித கத்தரீனா


St. Sienna Catherine

ஐரோப்பாவின் பாதுகாவலர்களில் ஒருவரான, சியென்னா நகர் புனித கத்தரீனா திருநாளன்று, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் துவக்கத்தில், இப்புனிதரைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் பாதுகாவலர்களில் ஒருவரான புனித கத்தரீனா அவர்கள், திருஅவையின் ஒன்றிப்புக்காக அதிகம் அதிகமாக உழைத்துள்ளார் என்று கூறினார் திருத்தந்தை. திருஅவைக்காகச் செபிப்பதிலும், உழைப்பதிலும், தன் நேரத்தைச் செலவிட்ட சியென்னா நகர் புனித கத்தரீனா அவர்களை நோக்கி, திருஅவையின் ஒன்றிப்புக்காகவும், இத்தாலி நாட்டிற்காகவும், ஐரோப்பிய ஒன்றிப்பிற்காகவும் பரிந்துரைக்குமாறு செபிப்போம், என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

Add new comment

3 + 2 =