ஜெர்மனியில் விசித்திர புகார்- வயலை காணவில்லை


An Image of stabber field in Germany. PC: DW.COM

தனது வயலில் விளைந்த மொத்த ஸ்டாபெரி பழங்களையும் காணவில்லை என ஜெர்மனியில் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெர்மனியில் லாம்ப்ஷிய்ம்  பகுதியில் உள்ள தனது வயலில் விளைந்திருந்த மொத்த ஸ்டாபெரி பழங்களையும் திருடர்கள் திருடிச் சென்று விட்டதாக ஜெர்மன் விவசாயி ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 1.7 ஏக்கர் நிலத்தில் அந்த அவர் வைத்திருந்த மொத்த ஸ்டாபெரி பழங்களையும் இரவு நேரத்தில் யாரோ திருடிச் சென்றனர். பலர் இணைந்து இந்தத் திருட்டை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பல வாகனங்களை பயன்படுத்தி அவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழங்களை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ள பொலிஸார், பொதுமக்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கண்டால் தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால்  ஆயிரக்கணக்கான ஹீரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்படுகின்றது.

அதுபோல் பழங்களை திருடுவது ஜெர்மனியில் இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டும் இதே போல பேட் சொபர்ன்ஹய்ம்ல் வாகனங்களை வாடகைக்கு எடுத்து திருடர்கள் பழங்களை திருடி ஆன்லைனில் விற்றுவிட்டனர். ஜெர்மனி ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் டன் ஸ்ட்ராபெர்ரி பழங்களை உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது. 

(லங்கா ஸ்ரீ - மே 21, 2019) 

Add new comment

15 + 1 =