ஜெர்மனியின் மனிதாபிமானம் அகதிகளுக்களுக்காய் அதிக அக்கறை


An Image of people migrating. PC: DAILY EXPRESS CO. UK

ஜெர்மனி அரசாங்கம் கடந்த ஆண்டு அகதிகளுக்காக 23 பில்லியன் யூரோக்களை செலவிட்டு சாதனை படைத்துள்ளது. அது அதற்கு முந்தைய ஆண்டு செலவைவிட 20.8 பில்லியன் ஹீரோக்களை விட 11 சதவீதம் கூடுதல் என அந்நாட்டு நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது. ஜெர்மனி ஒருமில்லியன் அகதிகளை ஒருங்கிணைக்க உதவியதுடன் வெளிநாட்டில் குடியேற்றத்தின் அடிப்படை காரணங்களை எதிர்த்துப் போராட உதவி செய்துள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதானமாக முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் நூறாயிரக்கணக்கான அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜெர்மன் எல்லைகளை திறந்து விட 2015 ஆம் ஆண்டு முதல் ஆதரவு அளித்து வந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாட்டில் அதிகரித்து அகதிகளால் நிலைமையை சமாளிக்க முடியாத நிலையில் தான் அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றார்.

இதனையடுத்து அகதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அவர்களின் சொந்த நாட்டிலேயே வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காகவும் 2018 ஆம் ஆண்டில் ஜெர்மனி அரசாங்கம் மொத்தம் 7.9 பில்லியன் யூரோக்களை செலவு செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டை ஒப்பிடும் பொழுது 16 சதவீதம் கூடுதலாகும்.

அவர்களுக்கு செலவிடுவதற்காக கடந்த ஆண்டு ஐரோப்பிய கூட்டாட்சி அரசாங்கத்திடமிருந்து 7.5 பில்லியன் யூரோக்களை ஜெர்மனி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர்களுக்காக ஜெர்மனி அரசாங்கம் பல பில்லியன்களை செலவிடுவதை அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

(லங்கா ஸ்ரீ - மே 21, 2019)    

Add new comment

3 + 8 =