Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சுவிஸ் நீதிமன்றத்தில் மீண்டும் விடுதலைப் புலிகள் வழக்கு
அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் புகார் ஒன்றினை தொடர்ந்து சுவிஸ் பெடரல் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பா, என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் குற்றவியல் அமைப்பு ஒன்றுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட இயலவில்லை என அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் அலுவலகம் புகார் ஒன்றை அளித்துள்ளது.
புகார் அளிக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ள அட்டர்னி ஜெனரல் அலுவலக செய்தி தொடர்பாளர் ஒருவர் எதர்க்காக தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.
ஒன்பது ஆண்டுகள் நீடித்த விசாரணைக்கு பிறகு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் உலக தமிழ் ஒருங்கிணைப்பு கமிட்டி WTCCக்கு நிதி உதவி செய்தனரா என்ற சந்தேகம் அட்டர்னி ஜெனரலுக்கு அலுவலகத்திற்கு ஏற்பட்டது.
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குற்றவியல் நீதிமன்றம் எல்டிடிஈ க்கும் WTCCக்கும் தொடர்பு இருப்பதாக உறுதி செய்ய இயலவில்லை என தெரிவித்திருந்ததுடன், எல்டிடிஇ ஒரு குற்றவியல் அமைப்பு என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை என்றும் நீதிபதிகள் கருதினாலும், வர்த்தக ரீதியாக மோசடி மற்றும் ஆவண மோசடி குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனைக்குட்பட்ட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. (Lanka Sri News)
Add new comment