சுற்றுச்சூழலைக் குறித்து கருத்தரங்குகளின் தொகுப்பு நூல்


புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சியில் திருத்தந்தை பிரான்சிஸ் (ANSA)

சுற்றுச்சூழலைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு வெளியிட்ட 'இறைவா உமக்கேப் புகழ்' திருமடலின் தொடர்ச்சியாக புனித பூமியில் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்குகளின் தொகுப்பு, ஒரு நூலாக, ஏப்ரல் 18, புனித வியாழனன்று வெளியானது.

"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல், புனித பூமியின் பாதுகாவலர்களான பிரான்சிஸ்கன் துறவு சபையினரின் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், புனித பூமியின் பாதுகாவலரான பிரான்சிஸ்கன் துறவி Francesco Patton, பாலஸ்தீனிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான Mohammed Dajani Daoudi ஆகியோர் உட்பட, பலர் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

Add new comment

1 + 3 =