Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சிறுபான்மை இனங்கள் ஆகிய தமிழ் முஸ்லிம் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கையோ
இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் சிறுபான்மை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தகவலாக, தகவலாகவே அமைந்துள்ளது.
மதங்களின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் செயல்படுவதால், மதவாதி நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதே சமீபத்திய சம்பவம் நிகழ்த்தி இருக்கின்றது.
ஆசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டமை முஸ்லிம் மக்களுக்கு எதிரானது மாத்திரமல்ல இது போன்றதொரு சம்பவம் நாளை தமிழர்களுக்கும் நடக்கும் என்பதைப் பறைசாற்றுகின்றது.
கடந்த காலங்களை பெரும்பான்மை சமூகத்தினர் தமிழர்களை ஒடுக்கி அடக்கி ஆட்சி செய்ய முயன்றனர். எனினும் விடுதலைப் புலிகள் எனும் பெரிய தடுப்பு சுவரினால் அது சாத்தியமற்றதாக காணப்பட்டபோதும், 30 ஆண்டுகளின் பின்னர் இன அழிப்பினை மேற்கொண்டு தமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டனர்.
சமகாலத்தில் முஸ்லிம் மக்களை சீண்டிவிட்டு மற்றொரு வன்முறைகளை முன்னெடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இனிவரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் துரிதமாக செயல்பட வேண்டிய காலம்.
தற்போது மூன்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளை ஆட்சியில் இருந்து வெளியேற்ற முடிந்த பிக்குவால் நாளை சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது இன்றைய ஆட்சி முறையாக உள்ளது.
இன்றைய கசப்பான சம்பவங்கள் சிறுபான்மை மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் சில தரப்பினர் தமிழ், முஸ்லிம் இனவாத ரீதியான பின்னூட்டங்களை பகிர்ந்து வந்தாலும், ஒட்டுமொத்த சமூகமும் அப்படி இருக்கவில்லை.
உண்மையில் தற்போதைய நிலையில் முஸ்லிம் சமூகம் மிகவும் அச்சமான சூழ்நிலையிலும் உள்ளனர்.
கோடிக்கணக்கான முதலீடுகளைப் போட்டு வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் முஸ்லிம் வர்த்தகர்கள் தமது உடைமைகளுக்கு எப்பொழுது ஆபத்து வரும் என்று அச்சத்தில் உள்ளனர்.
மார்க்க அடையாளங்களுடன் வெளியில் செல்லும் பெண்கள் எவ்வாறான இம்சைகளுக்கும் முகம்கொடுக்க நேரிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவிகள் புறக்கணிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
சிறு வியாபாரங்கள், சாப்பாடு உணவகங்கள், பலசரக்கு கடை நடத்தி வரும் முஸ்லிம் வர்த்தகர்கள், பெரும்பான்மையினரின் புறக்கணிப்பால் பெரும் நஷ்டங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமது கடைகளை மூடிவிட்டு வீடுகளில் இருக்கின்றார்.
பல நெருக்கடிகளுக்கு முஸ்லிம் சமூகம் தற்போது தள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இதே போன்ற துன்புறுத்தல்களை, புறக்கணிப்புகளை தமிழ் சமூகம் எதிர்நோக்கியிருந்தது.
சமூக வலைத்தளங்களில் சில அரசியல்வாதிகளின் தேவைக்காக இனவாத கருத்துக்களை பகிரப்படுகின்றன.
சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்சனை குறித்து சிந்திப்பதில்லை.
ஆபாசமான வார்த்தைகளால் இனங்களை அசிங்கப்படுத்துவது இவர்கள்.
ஒரு பௌத்த துறவி இருவரின் பதவியை பறிக்க முடிந்துள்ளது.
நாளை பல கைகள் இணைந்தால் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
இன்றைய கசப்பான சம்பவம் எந்த ஒரு சிறுபான்மை சமூகத்தவருக்கும் கொண்டாடக் கூடிய ஒன்று அல்ல.
இது சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான அழிவின் ஆரம்பம்.
தமிழ், முஸ்லிம் மக்கள் மிகுந்த அச்சத்துடன் கவனத்துடன் இருக்க வேண்டிய காலம் இதுவேயாகும். (Lanka Sri)
Add new comment