சிரியா அகதி குறித்து பிரித்தானிய உளவுத்துறை வெளியிட்ட தகவல்


Image of Shamima Begum

சிரியாவில் அகதி முகாமில் வசித்துவரும் ஷமீமா, தற்கொலைப் படை தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஆடைகளை தயாரித்ததாக பிரித்தானிய உளவுத்துறையினர் பிரதமர் மே -க்கு தகவல் தெரிவித்திருக்கிறாது. 

பிரித்தானிலிருந்து  15 வயதில் தப்பி சென்ற ஷமீமா பேகம்  சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருகிறார்.  சமீப காலமாகவே அவர் பிரித்தானிய திரும்ப விருப்பம் தெரிவித்து வந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குடியுரிமை ரத்து செய்து உள்துறை செயலாளர் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கிடையில் அவருக்கு பிறந்த மூன்றாவது குழந்தையும் உயிரிழந்து.

தான் சிரியாவில் இருந்த சமயத்தில் வெறும் மனைவியாக மட்டுமே இருந்தேன், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு  எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை, எந்த  பயங்கரவாத செயல்களுக்கும் உடந்தையாக இருந்தது இல்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரித்தானிய  உளவுத்துறையில் வேலை செய்து வரும் மூத்த அதிகாரி ஒருவர் தகவலை பத்திரிகை ஒன்றின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

சிரியாவில் இருந்த சமயத்தில் தற்கொலை படையினர் வெடிகுண்டுகளுடன் சேர்ந்த பெல்ட் தயாரிக்க உதவி இருக்கிறார் ஷமீமா, அந்த குண்டுகள் வெடிக்காமல் அவற்றை அகற்ற முடியாத அளவிற்கு தைத்து  கொடுத்து வந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.  மேலும் இதுகுறித்து பிரதமர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோருக்கு தகவல் கொடுத்து உள்ளதாக கூறியுள்ளார்.

Add new comment

1 + 15 =