கொந்தளிப்பை கிளப்பிய தீக்கிரையான பாரம்பரியமிக்க பாரிஸ் பேராலயம் பற்றிய டிரம்பின் கருத்து


An image of Notre Dame fire accident

பாரிஸ் நகரின் பாரம்பரிய சின்னமாக திகழும் நாட்ரி டாம் பேராலயம் தீயில் சிதைந்த நிலையில் அது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  உலகப்புகழ்பெற்ற நாட்ரி டாம் பேராலயம் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6 மணிக்கு பெரும் தீ விபத்தில் சிக்கியது.

உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அரை மணி நேரத்திற்குள் 400 தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து கடுமையாக போராடி, கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். உலகமே இச்சம்பவம் குறித்து கலங்கி நின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதில், மிகவும் பயங்கரமாக இருந்தது பேராலயம் கொழுந்துவிட்டு இருப்பதை பார்க்கையில், நெருப்பை துரிதமாக கட்டுப்படுத்த வேண்டுமானால், விமானம் மூலம் தண்ணீர் பாய்ச்சலாம் எனவும் ஆலோசனை வழங்கியிருந்தார்.

தற்போது அவர் கூறிய, விமானம் மூலம் தண்ணீர் பாய்ச்சலாம் என்ற கருத்தே உலகமெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோதிக் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் 850 ஆண்டுகால பேராலயத்தின் மீது விமானத்தின் மூலம் தண்ணீர் பாய்ச்சினால் மொத்த கட்டிடம் இடிந்து விழும் வாய்ப்பு உண்டு, என பல நிபுணர்கள் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, பிரான்ஸ் தீயணைப்புத் துறை நிபுணர்களின், அவரின்  கருத்துக்கு உடனடியாக பதில் அளித்துள்ளனர். நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஒன்றிணைந்து துரிதமாக செயல்பட்டு பெரும் விபத்தை தடுத்து நிறுத்தி விடலாம். ஆனால் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்தை பின்பற்றியிருந்தால் மொத்த பேராலயமே  சரிந்து விழுந்து இருக்கும் என பதிலளித்தனர். காட்டுத் தீயை கட்டுப்படுத்த பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை கட்டிடத்தில் பயன்படுத்துவது முட்டாள்தனம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

Add new comment

7 + 2 =