காணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25


கொசோவாவில் போரில் கொல்லப்பட்ட சிறார் (ANSA)

காணாமல்போயுள்ள சிறார் மற்றும், காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறார் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், காணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது.

1979 ஆம் ஆண்டு, ஆறு வயது சிறுவன் Etan Patz, நியு யார்க் நகரில், பள்ளிக்குச் சென்ற வழியில் காணாமல்போனதையடுத்து, அமெரிக்க ஐக்கிய நாடு, 1983 ஆம் ஆண்டில், மே 25 ஆம் தேதியை, காணாமல்போயுள்ள சிறார் தேசிய நாளாக அறிவித்தது.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மற்ற நாடுகளும், இதே மே 25 ஆம் தேதியன்று, இந்த நாளைக்  கடைப்பிடிக்கின்றன.

உலக அளவில் சிறார் கடத்தப்படும் விவகாரம் குறித்து உலகினரின் கவனத்தை ஈர்க்கவும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து அறிவுறுத்தவும், இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

மேலும் மே 25, இச்சனிக்கிழமையன்று, ஆப்ரிக்க நாளும் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான்

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில், ஏறத்தாழ ஆறு இலட்சம் சிறார், ஊட்டச்சத்து பற்றாக்குறைவால் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது என்று, யுனிசெப் எச்சரித்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் இவ்வாண்டு ஏறத்தாழ 38 இலட்சம் சிறார்க்கு, பாதுகாப்பும், உதவிகளும் தேவைப்படுகின்றன எனவும் யுனிசெப் கூறியுள்ளது.

(Agencies - வத்திக்கான் செய்தி) 

Add new comment

3 + 14 =