கடலுக்குள் விழுந்த விமானம் உள்ளிருந்த அனைவரும் பலியான சோகம்


Pilot and aircraft that met accident. PC: Lanka Sri

ஹன்டூரஸ் நாட்டில் கடலுக்குள் விமானம் விழுந்து அனைவரும் உயிரிழந்த நிலையில் விமானி மற்றும் பயணிகளின் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கின்றது. ஹன்டூரஸ் தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து ட்ரூஜில்லோ நகர் நோக்கி ஒரு சிறிய விமானம் நேற்று முன்தினம் கிளம்பியிருக்கிறது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் கடலுக்குள் விழுந்த நிலையில் உள்ளே இருந்த 4 பேர் உயிரிழந்தனர். இன்னொரு நபர் ஆபத்தான நிலையில் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சூழலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விமானத்தை இயக்கிய கனடாவை சேர்ந்த விமானி பேட்ரிக் போர்செத்தின் உட்பட அனைவரும் இறந்துள்ளனர். புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. விமானியை தவிர்த்து மற்ற 4 பேரும் அமெரிக்கர்கள் என தெரிய வந்திருக்கின்றது. 

(லங்கா ஸ்ரீ - மே 20, 2019) 

Add new comment

11 + 3 =