ஒரு நாளைக்கு 12 மணிநேரம்; வாரத்திற்கு 6 நாட்கள் வேலை - ஆதரிக்கும் தொழிலதிபர்கள்


An image of tired worker. from WordPress.com

சீனாவிலுள்ள அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்வதை கட்டாயமாக்கும் செயல்முறையை ஆதரித்த அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

1970களின் பிற்காலத்திலிருந்து 2000ஆவது ஆண்டின் மத்தியப்பகுதி வரை சுமார் 25 ஆண்டுகளுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 10 சதவீதமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தொடர் வீழ்ச்சிக்கு பிறகு 6 சதவீதத்தை நெருங்கி வருகிறது.

எனவே, சீனாவின் தொழில்துறையில் இயல்பான ஒன்றாக காணப்படும் '966' என்னும் செயல்முறையை முழு வீச்சில் நடைமுறைப்படுத்துவதன் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்று தொழிலதிபர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், உலகின் மிகப் பெரிய இணையதள வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபாவின் இணை நிறுவனரும், தலைவருமான ஜாக் மா, இத்திட்டத்தை ஆதரித்து பேசியது மக்களிடையே கொந்தளிப்பதை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டுசெல்வதற்கு '966' செயல்முறை ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் கூறியுள்ளார். இந்த திட்டத்தின்படி, காலை 9 மணி முதல் இரவு 9 வரை, வாரத்திற்கு ஆறு நாட்கள் சீனர்கள் பணிபுரிய வேண்டியிருக்கும்.

(BBC Tamil)

Add new comment

3 + 1 =