உலக வெப்ப, மாசுக்கேட்டுக்கு இந்தியா, சீனாவை பழிக்கும் அமெரிக்க அதிபர்


Donald Trump Said Really Stupid Things About Climate Today. PC: Mother Jones

கடந்த நூற்றாண்டில் வளர்ந்த நாடுகள் வெளியேற்றிய கரியமில மற்றும் பசுமை இல்ல வாயுக்களே பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வளரும் நாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கூறி வருகின்ற நிலையில், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை மாசு கட்டுப்பாட்டில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். 
 

இங்கிலாந்தில் டிரம்ப் தன்னுடைய மூன்று நாள் பயணத்தின் போது கடைசி நாளில் டி.வி. ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், நான் சொல்கிறேன், அமெரிக்கா அனைத்து புள்ளி விவரங்களையும் அடிப்படையாகக் கொண்டு இப்போதும் சுத்தமான கால நிலையில்தான் உள்ளது. அது நல்லதுதான், ஏனென்றால் சிறந்த நீர், தூய்மையான தண்ணீர் வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மாசுபாடு மற்றும் தூய்மை குறித்த உணர்வு இல்லை.

சீனா, இந்தியா, ரஷ்யா உள்பட பல நாடுகளில் அவர்களுக்கு நல்ல காற்று இல்லை. நல்ல தண்ணீர் இல்லை மற்றும் மாசுபாடு உணர்வு குறைவு. நீங்கள் சில நகரங்களுக்குச் சென்றால் நீங்கள் மூச்சு விட முடியாது. அவர்களின் பொறுப்பை அவர்கள் செய்யவில்லை என கூறினார். (Thinaboomi)

பருவநிலை மாற்றம் உண்மையல்ல என்று கூறிவரும் டிரம்ப் 2017ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

புவி வெப்பமடைதல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் நிலவிய வெப்பத்தைவிட இரண்டு டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. (BBC)

குறைகூறுவதை விடுத்து  சில நாடுகள் செயலில் இறங்கியுள்ளன. அவற்றை பின்பற்றினாலே போதும். அதையும் விடுத்து நாம் செயலில் இறங்கவேண்டும்.

Add new comment

16 + 0 =