உலக புத்தக விருது: யாருக்கு? எவ்வளவ்வு பரிசு? தெரிந்துகொள்ள லிங்கை சொடுக்கவும்


Annie who wins the global book prize. PC: OrissaPOST.COM

உலக புத்தக விருது: மும்பையை சேர்ந்த எழுத்தாளருக்கு ரூ. 69.82 இலட்சம் பரிசு. மும்பையை சேர்ந்த இந்திய எழுத்தாளர் ஆன்னி ஜைதி எழுதிய பிரெட், சிமென்ட், கேக்டஸ் என்ற படைப்புக்கு உலக புத்தக விருது கிடைத்துள்ளது. இதற்கு ரூ. 69.82 இலட்சம் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

லண்டனில் செயல்படும் நைன் டாட்ஸ் அறக்கட்டளை சமுதாயத்தில் நடக்கும் பிரச்னை குறித்து புதிய கண்ணோட்டத்தில் உருவாக்கும் படைப்பை அங்கீகரித்து இந்த விருதினை அளிக்கிறது. முதலில் கொடுக்கப்பட்ட தலைப்பில் 3,000 வார்த்தைகள் கொண்ட கட்டுரை ஒன்றை எழுத வேண்டும். அது தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் படைப்பாளர் 7 மாத காலத்தில் தனது கட்டுரையின் கருவுக்கு வலு சேர்க்கும் வகையில் புத்தகம் ஒன்றை உருவாக்க வேண்டும். பரிசு பெறும் அந்த புத்தகத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக அச்சகம் பிரசுரிக்கும். ஆன்னியின் இப்புத்தகம் வரும் 2020 ஆம் ஆண்டில் அச்சிடப்பட உள்ளது.

பகுதி நேர எழுத்தாளரான ஆன்னி ஜைதி, பல்வேறு கட்டுரைகள், சிறுகதைகள், பாடல்கள், நாடகங்கள் ஆகியவற்றை கற்பனை மற்றும் உண்மையான அனுபவத்தை கொண்டு எழுதியுள்ளார். இவரது படைப்பில் நோன் டர்ப், பேண்டரிங் வித் பண்டிட்ஸ் அண்ட் அதர் ட்ரூ டேல்ஸ் 2010 ஆம் ஆண்டிற்கான கிராஸ்வேர்டு புத்தக விருதினையும், லவ் ஸ்டோரிஸ் 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த குறுநாவலாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாயின.

உலக புத்தக விருது கிடைத்தது பற்றி ஆன்னி கூறுகையில், நைன் டாட்ஸ் அறக்கட்டளை புதிய படைப்பாளர்களை ஊக்குவிப்பது மிகவும் பிடித்திருக்கிறது. இதற்கு முன்பும் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால், போதிய நிதி வசதியும், மன வலிமையும் அப்போது இல்லை. இப்போது, இந்த பரிசுத் தொகையின் மூலம் அதை நிவர்த்தி செய்து என்னுடைய படைப்பு பணியைத் தொடருவேன் என்று தெரிவித்தார்.

(Thinaboomi - மே 31, 2019)

Add new comment

9 + 10 =