உலகைக் காக்கப் போராடிவரும் இளையோர்


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, வகுப்புக்களைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, வகுப்புக்களைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவியர் (2019 Getty Images)

மார்ச் 15, வெள்ளியன்று, உலகின் 125 நாடுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து, சாலைகளுக்கு வந்தனர். 2000த்திற்கும் அதிகமான நகரங்களில் ஊர்வலங்களும்,  கூட்டங்களும் நடத்தினர். அவர்களது ஒரே அறைகூவல் - பூமிக்கோளத்தைக் காப்பாற்றுங்கள்! மார்ச் 15ம் தேதியைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமைகளில் இளையோரின் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஏப்ரல் 12  கடந்த வெள்ளியன்று, இங்கிலாந்தின் 50 நகரங்களில், இளையோரின் போராட்டம் தொடர்ந்தது.

உலகை இன்று அச்சுறுத்திவரும் பெரும் ஆபத்து, பருவநிலை மாற்றம். இதைக் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தவரும், ‘புவி வெப்பமாதல்‘ (global warming) என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்தியவருமான முன்னோடி அறிவியலாளர், வாலஸ் ஸ்மித் புரோக்கர் (Wallace Smith Broecker) அவர்கள், இவ்வாண்டு, பிப்ரவரி 18ம் தேதி, தன் 87வது வயதில், காலமானார்.

அண்மையில் இளையோர் மேற்கொண்ட போராட்டங்களில் வெளியான ஒரு முக்கிய எச்சரிக்கை, புதைப்படிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறையுங்கள் என்பது! பருவநிலை மாற்றம் குறித்து, இளையோரும், வளர் இளம் பருவத்தினரும் உணர்ந்துள்ள அளவுக்கு, அரசியல் தலைவர்கள் உணராமல் இருப்பது, வேதனை தரும் உண்மை! 

(வத்திக்கான் செய்தி)

Add new comment

5 + 15 =