உலகின் வயதான நபர் காலமானார்


A man at dusk. (Pixabay)

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷ்யாவை சேர்ந்த அப்பாஸ் இலியிவ் தனது நூற்றி இருபத்தி மூன்றாவது வயதில் காலமானார். ரஷ்யாவை சேர்ந்த அப்பாஸ் அலி என்பவர் ஜார்ஜியாவின் அருகில் உள்ள இங்குஷெஸியா என்ற பகுதியில் வசித்து வந்தார்.

1896 ஆம் ஆண்டு பிறந்த இவர் உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனையை படைத்தார். பிறப்பு சான்றுகள் அழிந்துபோனதால் மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இயலாமல்போனது. இதற்காக சான்றிதழை நகர நிர்வாகம் இவருக்கு அளித்தது தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் ராணுவத்தில் 1917 முதல் 1922 ஆம் ஆண்டு வரை பணியாற்றிய இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார்.

தன்   ஆரோக்கியத்திற்கு   உண்டான  இரகசியம்  என்ன  என்று அவர்  கூருவது  சுத்தமான  காற்று, தினசரி பச்சை காய்கறிகளை உண்பது, அத்துடன் சுத்தமான பசும்பால் அருந்துவது, தினமும் 11 மணி நேரம் தூங்கக்தூங்குவது,   வாழ்நாளில் மருத்துவமனைக்கு செல்லாதிருப்பது. இந்நிலையில் அப்பாஸ்  மே  14, 2019 அன்று  காலமானதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Add new comment

2 + 10 =