உயிரை பணயம் வைத்து நண்பனை காப்பாற்றிய வாயில்லா ஜீவன்!


A dog saving a dog. from the indian express

காரின் பின்பகுதியில் செல்லவிருந்த தன்னுடைய நண்பனை வாயில்லா ஜீவன் ஒன்று வேகமாக ஓடிச்சென்று காப்பாற்றும் காணொளி காட்சியானது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. கனடா நாட்டின் கியூபெக் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு காட்சியில் பதிவாகி இருந்த ஒரு காணொளி காட்சி தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.

இந்த காணொளியில் மூன்று வளர்ப்பு நாய்களை அழைத்துக் கொண்டு வரும் உரிமையாளர் ஒருவர் அவற்றுடன் சிறிது நேரம் விளையாடுகின்றார். அந்த சமயம் அங்கு வரும் பெண் ஒருவர் நேராக தன்னுடைய காருக்கு சென்று அதனை பின்பக்கமாக ஓட்டி வருகிறார். ஒருவகை நாயானது மிகவும் குட்டையாக இருப்பதால் வேகமாக அந்த பணி படலத்தை கடக்க முடியவில்லை. அதற்குள் அந்த காரும் வேகமாக பின்னோக்கி வருகிறது அந்த நாயின் மீது கார் ஏறி விடுமோ என அனைவரும் பதறியபடியே பார்க்க, வளர்ந்த அதன் நட்பு  நாய் ஒன்று வேகமாக ஓடி வந்து அதனை அங்கிருந்து தூக்கி செல்கிறது.

இதற்கிடையில் காரை எடுத்துச் சென்ற பெண் மீண்டும் தன்னுடைய காரை அங்கேயே நிறுத்திவிட்டு அந்த இரண்டு நாய்களையும் கட்டித் தழுவுகிறார். இதுகுறித்து கூறிய அந்தப் பெண்மணி நான் கண்ணாடியில் ஏதோ ஒன்று பின் பக்கம் செல்வதை பார்த்தேன், அதனை நசுக்கி விட்டேன் என்றுதான் நினைத்துக் கொண்டு காரை வேகமாக நிறுத்தினேன் என தெரிவித்துள்ளார்.
 

Add new comment

3 + 4 =