இரண்டடுக்கு பேருந்து விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி, 22 பேர் காயம்...


An image of bus accident

பிரித்தானியாவில் நியூ போர்ட் பகுதியில் உள்ள சாலையில் கார்கள் மீது இரண்டடுக்கு பேருந்து மோதி விபத்து ஏற்படுத்தி அதில் ஒருவர் பலியானதோடு 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நியூ போர்ட் பகுதியில் உள்ள சாலையில் இரண்டடுக்கு பேருந்து ஒன்று அப்பகுதி வழியாக வந்த இரண்டு கார்களின் மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 12.15 மணிக்கு நடந்த இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 60 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

மேலும் அதில் இருந்த 2 பேர் கவலைக்கிடமான நிலையில்  மீட்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பேருந்து ஓட்டிவந்த ஓட்டுநரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்ததையடுத்து  3 அவசர உதவி வாகனங்கள் மற்றும் 15 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

செயின்ட்  மேரி மருத்துவமனையில் இருந்து இன்னும் உதவியாளர்களை போலீசார் நாடுகின்றனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்து ஓட்டுநர் மீது தவறு இருப்பதாகவே எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை 22 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Add new comment

5 + 3 =