இந்தியாவில் பழங்குடி மக்கள் மீது நடக்கும் அத்துமீறல் அமெரிக்காவில் ஒன்று கூடிய தமிழர்கள்


Meet indigenous cultures in Southeast Asia. PC: AudleyTravel.com

அமெரிக்காவில் நடைபெறும் கருத்தரங்கில் இந்தியாவில் தலித் மற்றும் மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களின் அவலங்கள் குறித்து எடுத்துரைக்க தமிழகத்தை சேர்ந்த 6 பேர் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க அரசு சார்பில் இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த நிலவரங்களை அறிய 22 நாட்கள் சிறப்பு கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கிற்கு பழங்குடியின மற்றும் தலித் செயல்பாட்டாளர்கள் பல ஆய்வாளர்கள் என ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக சிலரை இனம் கண்டு தேர்வு செய்கின்றனர். அவர்களை தங்கள் நாட்டிற்கு அழைத்து, அடித்தள மக்களின் நிலைகளை கண்டறிந்து கருத்து கேட்பு மற்றும் கருத்தரங்குகள் நடத்தி இருக்கின்றனர்.

ஆனால் இந்தியாவில் இருந்து ஏழு பேர் தேர்வாகியுள்ளனர். அதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். பழங்குடி மக்கள் அதிகம் வாழும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதியின் பிரதிநிதியாக பழங்குடி தலித் செயல்பாட்டாளர் வீரப்பன் தேர்வாகி அமெரிக்கா சென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க அரசின் சார்பில் இந்தியாவில் பழங்குடி தலித் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தேர்வு செய்து, 22 நாட்கள் கலந்துரையாடல் ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலக பொது மன்னிப்பு சபை, பாராளுமன்றம், உச்சநீதிமன்றம் போன்ற இடங்களில் பழங்குடி, தலித் மக்களின் உரிமைகள் மீறல், இருக்கவும் உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து 7 செயல்பாட்டாளர்களை அழைத்துள்ளனர் Cultural Public Affairs Ministry US. 

அழைப்பின் பெயரில் நீலகிரி கோயம்புத்தூரை சேர்ந்த பழங்குடி சமூக செயல்பாட்டாளர் பிரதிநிதியாக என்னை தேர்வு செய்துள்ளனர். கருத்தரங்கு மட்டுமில்லாமல் வாஷிங்டன், மிஸிஸிபி, நியூ ஒர்லேண்ட், பென்சில்வேனியா போன்ற பகுதிகளில் விளக்க பயிற்சியும் நடைபெற உள்ளது.

செவ்விந்திய பழங்குடிகளுடன் கலந்துரையாடல் நடக்கிறது. இதனால் அமெரிக்க பழங்குடிகளின் நிலையை அறிந்துகொள்ள முடியும். அதே சமயம் இந்திய பழங்குடிகள் பெற வேண்டிய உரிமைகள் குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Add new comment

2 + 3 =