இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு


இந்தியாவில் கிறிஸ்தவர்கள். AFP

இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பரந்து விரிந்து அதிகரித்து வருவது பெரும் அச்சத்தைத் தருவதாக உள்ளது என கவலையை வெளியிட்டுள்ளார் இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர்.

அண்மைத் தாக்குதல்களை நோக்கும்போது, பகைமையை விதைக்கும் குழுக்களைப் பற்றி மட்டுமல்ல, இவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆதரவு குறித்தும் கவலைப்பட வேண்டியிருக்கிறது என்றார் இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலரான ஆயர் தியோடர் மஸ்கரினஸ்.

தாக்குதல்களை தடுத்து நிறுத்தவேண்டிய அரசியல் தலைவர்களே, அவற்றிற்கு ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டிய ஆயர் மஸ்கரினஸ் அவர்கள், திருஅவையினர் தாக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், அவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றுவதாகும் எனவும் விளக்கமளித்தார்.

எத்தனை துன்பங்கள் வந்தாலும், ஏழைகள் மத்தியில் திருஅவையின் பணி தொடரும் என்ற உறுதியை எடுத்துரைத்த இந்திய ஆயர் பேரவைப் பொதுச் செயலர், ஆயர் மஸ்கரினஸ் அவர்கள், ஏழைகள் மீது திருஅவை கொண்டிருக்கும் அன்பை, எந்தச் சித்ரவதையாலும் தடுத்து நிறுத்தமுடியாது என மேலும் கூறினார்.

(வத்திக்கான் செய்தி)

Add new comment

2 + 2 =