Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஆப்பிரிக்காவில் தேவாலயம்மீதான தாக்குதல், பாதிரியார் உட்பட ஆறுபேர் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான Burkina Faso நாட்டில் வழிபாட்டின் பொழுது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஞாயிறு காலை 9 மணிக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் திருப்பலி நடந்து கொண்டிருந்தபோது, இஸ்லாம் மதத்தின் தீவிரவாதிகளால், ஓர் அருள்பணியாளரும், 5 இறைமக்களும் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாக, திருப்பீடத்தின் திருப்பீட இடைக்கால தகவல் தொடர்பாளர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Burkina Faso நாட்டின் Dablo எனுமிடத்தில் Abbé Siméon Yampa என்ற 34 வயது அருள்பணியாளர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, ஆயதங்களுடன் கோவிலில் புகுந்த 20 இஸ்லாமியத் தீவிரவாதிகள், அவரைச் சுட்டுக் கொன்றதுடன், கோவிலில் இருந்த மக்களுள், ஐவரை தேர்வு செய்து, சுட்டுக்கொன்று விட்டு, அக்கோவிலுக்கும் தீயிட்டுச் சென்றனர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிறிய வடக்கு நகரமான சில்லாட்ஜி பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment