ஆபத்து... புலிக்கொசு... பிரான்சுக்கு சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை


Tiger mosquito biting

பிரான்ஸில் டைகர் என அழைக்கப்படும் ஆபத்தான நோய்களை பரப்பும் கூடிய புலிக்கொசு பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 2018 ஆவது ஆண்டு இது குறித்து சுகாதாரத்துறை ஓர் எச்சரிக்கையை தந்திருக்கிறது. இதில் கடந்த ஆண்டுகளை விட பாதிக்கும் அதிகமாக இந்த வகையான கொசுக்கள் உற்பத்தியாகி இருக்கின்றது என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த வகை கொசுக்களால் ஜிகா   நோயும், டெங்கு நோயும், சிக்கன் குனியா நோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. பெரும்பாலும் இவ்வகையான கொசுக்கள் கிராமப் புறங்களிலேயே இருந்துவந்தாலும், ஒருமுறை நகர்ப்புறங்களுக்கு வருபவற்றை நாம் ஒழிப்பது மிகவும் கடினம்  என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பெரும்பாலான துறைகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சுகாதாரத்துறை, மக்களை விழிப்பாய் இருக்க எச்சரித்துள்ளது.
கழிவு நீரை முற்றிலும் அகற்றுவது நல்ல நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது என மிக எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை கூறியிருக்கின்றது.

இவ்வகை கொசுக்கள் பரப்புகின்ற நோயால் கடுமையான மூட்டுவலி, காய்ச்சல், தலைவலி, கண்ணில் நீர் வடிதல் மற்றும் சொரிசிரங்கு களும் அடங்கும். இவ்வகை கொசுக்கள் ஏற்கனவே பிராந்தியத்தில் பரவி இருக்கின்ற நிலையில் விடுமுறைக்கு சென்று நாடு திரும்புவோரிடமிருந்து, அவர்களுக்கு  சென்ற இடங்களில் மேற்சொன்ன நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருந்தால்,   இந்த வைரஸ்களை அதை  எடுத்து பரப்புவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது.

Add new comment

1 + 2 =